-இன்விக்டோ இரண்டு வேறியண்ட்ஸில் வழங்கப்படும்
- ரூ.24.82 லட்சம் திருத்தப்பட்ட விலையில் ஆரம்பம்
மாருதி சுஸுகிஇன்விக்டோ எம்பீவியை இந்தியாவில் 5 ஜூலை 2023 அன்று ரூ.24.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது.இது ஜெட்டா ப்ளஸ் மற்றும் ஆல்ஃபா ப்ளஸ் போன்ற இரண்டு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது.இப்போது, கார் தயாரிப்பாளர் அதன் என்ட்ரி லெவல் வேரியண்ட்டில் ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம், ஜெட்டா ப்ளஸ் மாறுபாட்டின் விலை இப்போது ரூ.3,000 வரை அதிகரிக்கபட்டன.
இன்விக்டோ ஜெட்டா ப்ளஸின் புதிய சேஃப்டி ஃபீச்சர்ஸ்
ஜெட்டா ப்ளஸ் வேரியண்ட்டில் இப்போது ரியர் சீட் பெல்ட் ரிமைன்டருடன் வருகிறது.முன்பு, ரியர் சீட் பெல்ட் ரிமைன்டர் டாப்-ஸ்பெக் ஆல்ஃபா ப்ளஸ் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்பட்டது.
மாருதி சுஸுகி இன்விக்டோ அம்சங்கள்
இது தவிர, மூன்று வரிசை எம்பீவியின் கேபின் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆறு ஸ்பீக்கர் சிஸ்டம், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கண்ட்ரோல்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற அம்சங்களுடன் வரும்.பார்க்கிங் கேமரா, கீலெஸ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டெபல் மற்றும் ரிட்ராக்டெபல் ஓஆர்விஎம்’ஸ் மற்றும் ஆறு ஏர்பேக்ஸ் போன்ற அம்சங்களும் வழங்கப்படுகின்றன.குறிப்பிடத்தக்க வகையில், ஜெட்டா ப்ளஸ் வேரியண்ட் ஏழு மற்றும் எட்டு சீட்டர் அமைப்புகளுடன் இருக்கும்.
இன்விக்டோ எம்பீவி இன்ஜின்
இன்விக்டோ 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் ஒரு ஹைப்ரிட் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.இ-சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, இது 184bhp பவர் வெளியீட்டை உருவாக்க ட்யூன் செய்யப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்