- இன்விக்டோ மூன்று வேரியண்ட்ஸில் கிடைக்கிறது
- ஜூலை 2023 இல் தொடங்கப்பட்டது
மாருதியின் புதிய ஃபிளாக்ஷிப் கார் இன்விக்டோவின் டாப்-ஸ்பெக் வேரியண்ட்டின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது, இது கார் தயாரிப்பாளரின் விற்பனையை அதிகரிக்க வழிவகுக்கிறது. இன்விக்டோவின் டாப் வெர்ஷன் ஆல்ஃபா ப்ளஸ் ஆகும், இதன் விலை ரூ. 28.42 லட்சம் மற்றும் ஏழு சீட்டர் கொண்ட எடிஷனில் மட்டுமே கிடைக்கும்.
மேலும், இந்த ப்ரீமியம் எம்பீவி ஒவ்வொரு மாதமும் 500 முதல் 700 யூனிட்ஸ் வரை சப்ளை செய்வதாகவும், சுமார் 5,000 ஆர்டர்கள் நிலுவையில் உள்ளதாகவும், 8 முதல் 10 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் இருப்பதாகவும் கார் உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக டொயோட்டாவின் டாப்-ஸ்பெக் ZX மற்றும் ZX (O) வேரியண்ட்ஸின் முன்பதிவுகளை நிறுத்தியது. அதிக தேவை காரணமாக, இந்த காருக்கு 15 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட்டில் உள்ளது.
மாருதி சுஸுகியின் இன்விக்டோ ஜூலை 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஃபிளாக்ஷிப் எஸ்யுவி ஆகும், இது டொயோட்டா இனோவா க்ரிஸ்டாவின் ZX வேரியண்ட்டின் ரீபேட்ஜ் மாடல் ஆகும். இது இசிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்ட 2.0-லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்