- இன்விக்டோ பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜினுடன் இரண்டு வேரியண்ட்ஸில் வழங்கப்படும்
- எம்பீவி செவன் மற்றும் எயிட் சீட்டரில் கிடைக்கிறது
மாருதி சுஸுகி ஹைகிராஸ்-அடிப்படையிலான எம்பீவி, இன்விக்டோவை இந்தியாவில் 5 ஜூலை 2023 அன்று அறிமுகப்படுத்தியது. இது இரண்டு வேரியண்ட்ஸில் ஆரம்ப விலை ரூ.24.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வழங்கப்படுகிறது. இந்த ப்ரீமியம் நெக்ஸா காரின் முன்பதிவு ஜூன் மாதம் தொடங்கியது மற்றும் இதுவரை 6,400 ஆர்டர்ஸை பெற்றுள்ளது. இந்தக் கட்டுரையில், நாடு முழுவதும் உள்ள மாருதி இன்விக்டோவிற்கான வெயிட்டிங் பீரியடை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
மாருதி சுஸுகி இன்விக்டோ வெயிட்டிங் பீரியட்
இன்விக்டோ எம்பீவி ஆனது ஜெட்டா ப்ளஸ் (செவன்/எயிட் சீட்டர்) அல்லது ஆல்ஃபா ப்ளஸ் (செவன் சீட்டர்) வேரியண்ட்ஸில் இருக்கலாம். மாடலுக்கான வெயிட்டிங் பீரியட் தற்போது எட்டு முதல் பத்து மாதங்கள் வரை உள்ளது. மேலும், எங்கள் ஆதாரங்களின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி டீலர்ஷிப்ஸில் ஜெட்டா ப்ளஸ் வேரியண்ட்டின் ஸ்டாக் உள்ளது, இது ஒரு மாதத்திற்குள் டெலிவரி செய்யப்படும். இப்போது இந்த கால அளவு அதன் டொயோட்டா ட்வின் ஹைகிராஸை விட கணிசமாகக் குறைவாக உள்ளது, இது ஹைப்ரிட் வேரியண்ட்ஸ்க்கு 23 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியடை கட்டளையிடுகிறது.
மாருதி இன்விக்டோ எம்பீவியின் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
இன்ஜினைப் பொறுத்தவரை, மாருதி இன்விக்டோ ஒரு இ-சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்ட 2.0-லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜினுடன் இருக்கலாம். இந்த மோட்டார், பெட்ரோல் பயன்முறையில், 172bhp மற்றும் 183Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஹைப்ரிட் மோட்டார் 11bhp மற்றும் 206Nm பீக் டோர்க்கை உருவாக்குகிறது. மேலும், இந்த டியூன் நிலையில், இன்ஜின் 23.24kmpl ஃபியூல் எஃபிஷியன்சியை வழங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்