- இன்விக்டோ பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்ட்ரெயினுடன் வழங்கபடும்
- மாருதி எம்பீவியின் டெலிவரி விரைவில் தொடங்கபடும்
மாருதி சுஸுகி தனது புதிய இன்விக்டோ எம்பீவியை ரூ.24.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஹைகிராஸ் அடிப்படையிலான இன்விக்டோ இரண்டு வேரியண்ட்ஸிலும் நான்கு வண்ண விருப்பங்களிலும் வழங்கப்படுகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு கடந்த மாதமே ரூ. 25,000 க்கு தொடங்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ.61,860 ஆரம்ப விலையில் சப்ஸ்க்ரிப்ஷன் திட்டத்தைப் பெறலாம்.
மாருதி சுஸுகி இன்விக்டோவின் வேரியண்ட்ஸ்
இன்விக்டோ எம்பீவியின் வேரியண்ட்ஸைப் பற்றி பேசுகையில், இது ஜெட்டா ப்ளஸ் மற்றும் ஆல்ஃபா ப்ளஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது. இது நிலையானதாக 7 சீட்டர் விருப்பத்தைப் பெற்றாலும், ஜெட்டா ப்ளஸ் வேரியண்ட் 8 சீட்டர் அமைப்பில் விற்கப்படும்.
இன்விக்டோ எம்பீவி வண்ண விருப்பங்கள்
இது நெக்ஸா ப்ளூ, மிஸ்டிக் ஒயிட், மெஜஸ்டிக் சில்வர் மற்றும் ஸ்டெல்லர் ப்ரான்ஜ் உள்ளிட்ட நான்கு வண்ண விருப்பங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.
மாருதி இன்விக்டோ டாப் மாடலான ஆல்ஃபா ப்ளஸ் வேரியண்டின் அம்சங்கள்
மாருதி சுஸுகி இன்விக்டோ 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், டூயல்-ஜோண் க்ளைமேட் கண்ட்ரோல், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பவர்ட் டெயில்கேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதனுடன், பவர்ட் டிரைவர் சீட், ஆம்பியன்ட் லைட்ஸ், ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், டீபீஎம்எஸ், 360 டிகிரி சரவுண்ட் கேமரா மற்றும் ஆறு ஏர்பேக்ஸ் போன்ற அம்சங்களுடன் வழங்கப்படுகின்றன.
2023 இன்விக்டோ இன்ஜின் மற்றும் பர்ஃபார்மன்ஸ்
மாருதி இன்விக்டோ 2.0 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது இ-சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் இன்ஜின் 172bhp மற்றும் 188Nm டோர்க்கை உருவாக்குகிறது. மேலும், இதன் ஹைப்ரிட் மோட்டார் 11bhp அதிக பவரையும், 206Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது தவிர, அதன் ஹைப்ரிட் இன்ஜின் லிட்டருக்கு 23.24 கி.மீ மைலேஜ் தரும் என்று கார் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
புதிய மாருதி சுஸுகி இன்விக்டோ எம்பீவியின் வேரியண்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
ஜெட்டா ப்ளஸ் (7 சீட்டர்) - ரூ.24.79 லட்சம்
ஜெட்டா ப்ளஸ் (8 சீட்டர்) - ரூ.24.84 லட்சம்
ஆல்ஃபா ப்ளஸ் (7 சீட்டர்) - ரூ.28.42 லட்சம்
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்