மாருதி சுஸுகி தனது புதிய மாடலான இன்விக்டோ எம்பீவியை ஜூலை 5, 2023 அன்று விலைகளுடன் வெளியிடும். இந்த கார் தயாரிப்பாளர் ஏற்கனவே ஹைகிராஸ் அடிப்படையிலான எம்பீவியின் முன்பதிவுகளை ரூ.25,000 டோக்கன் தொகையில் தொடங்கியுள்ளார். வரவிருக்கும் இன்விக்டோ, பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் சிங்கிள், டாப்-ஸ்பெக் ஆல்ஃபா ப்ளஸ் ட்ரிமில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
எக்ஸ்டீரியர்
எக்ஸ்டீரியரில், இன்விக்டோ எம்பீவி ஆனது டொயோட்டா இனோவா ஹைகிராஸின் ஒரே மாதிரியான பெரும்பாலான வடிவமைப்பு இதில் காணப்படலாம். இதில் ஃப்ரண்ட் பம்பர், ஸ்கொயர்-ஆஃப் வீல் ஆர்ச்ஸ் உடன் பெரிய கிளாடிங், டோர் பேனலில் உள்ள கேரக்டர் லைன்ஸ், ரியர் எல்இடி டெயில்லேம்ப்ஸ், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் ரூஃபில் பொருத்தப்பட்ட எக்ஸ்டென்டெட் ஸ்பாய்லர் ஆகியவற்றைப் பெறலாம். எம்பீவியில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில் மற்றும் பம்ப்பர்ஸ், மாற்றியமைக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்ஸ், திருத்தப்பட்ட டெயில்லைட் க்ளஸ்டர்ஸ் மற்றும் புதிய அலோய் வீல்ஸ் ஆகியவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.
இன்டீரியர் மற்றும் ஃபீச்சர்ஸ்
ஆல்ஃபா ப்ளஸ் வேரியண்ட் ஹைகிராஸின் ZX (O) ட்ரிம் அடிப்படையில் அமைந்திருப்பதால், கேபின் முழுவதும் ப்ரீமியமாக இருக்கும். இந்த எம்பீவி ஆனது சாஃப்ட்-டச் டூயல்-டோன் டாஷ்போர்டு, 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், மல்டி-ஜோண் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
மற்றும் இதில் மெமரி ஃபங்ஷன் கொண்ட டிரைவர் சீட், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், ரிக்லைன் ஃபங்ஷன் கொண்ட ஓட்டோமான் ரியர் சீட்ஸ், ஆம்பியன்ட் லைட்டிங்ஸ், ரூஃபில் பொருத்தப்பட்ட ஏசி வென்ட்ஸ், ஒரு பவர்ட் டெயில்கேட் மற்றும் ஒரு பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களையும் இதில் வழங்கலாம்.
சேஃப்டி ஃபீச்சர்ஸில் இந்த இன்விக்டோ ஆல்ஃபா வேரியண்டில் ஆறு ஏர்பேக்ஸ், 360 டிகிரி கேமரா, இஎஸ்பி, ஹில் ஹோல்ட்/ டிஸ்செண்ட் கண்ட்ரோல், ப்ளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரோனிக் பார்க்கிங் ப்ரேக், த்ரீ பாயிண்ட் சீட் பெல்ட்ஸ் அனைத்து பயணிகளுக்கு மற்றும் ஏடாஸ் டெக்னாலஜி ஆகியவற்றை இது பெறலாம்.
இன்ஜின் விவரக்குறிப்புகள்
மாருதி சுஸுகி இன்விக்டோ அதன் டொயோட்டா நிறுவனத்திடமிருந்து வாங்கிய ஒரே பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜினை பெறும். இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இ-சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்படும். இந்த ஹைப்ரிட் இன்ஜின் 184bhp மற்றும் 188Nm பீக் டோர்க்கை உருவாகும்.
விலை மட்டும் போட்டியாளர்
விலையைப் பொறுத்தவரை, மாருதி சுஸுகி இன்விக்டோ அதன் ஆல்ஃபா ப்ளஸ் வேரியண்ட்க்கு ரூ.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை போகலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
வந்தவுடன், இன்விக்டோ எம்பீவி இந்திய மார்க்கெட்டில் டொயோட்டா இனோவா ஹைகிராஸ், கியா கேரன்ஸ், மஹிந்திரா XUV700, டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் டொயோட்டா இனோவா க்ரிஸ்டா ஆகியவற்றுக்கு எதிராக போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்