- கிராண்ட் விட்டாரா இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த மைல்கல்லை எட்டியது
- ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்ஸின் விற்பனையை அதிகரித்தன
கடந்த 23 மாதங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான கிராண்ட் விட்டாரா கார்களை விற்பனை செய்துள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. மிகக்குறுகிய காலத்தில் மிக வேகமாக விற்பனையான கிராண்ட் விட்டாரா மைல்கல்லை எட்டியது என்று சொல்லலாம்.
மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா முதன்முதலில் செப்டம்பர் 2022 இல் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் மாடலின் பிரபலம் அன்றிலிருந்து ஈர்க்கக்கூடிய வெற்றி விகிதத்துடன் முன்னேறி வருகிறது என்பதில் இருந்து தெளிவாகிறது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (CIAM) வெளிப்படுத்தியுள்ளபடி, ஜூன் 2024 இறுதிக்குள் மாருதி சுஸுகி நிறுவனம் 1,99,550 யூனிட் கிராண்ட் விட்டாரா கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த மாடல் முதல் லட்சம் யூனிட் விற்பனையை எட்ட 12 மாதங்கள் மட்டுமே ஆனது. ஒரு லட்சம் யூனிட் விற்பனையை எட்ட இன்னும் 10 மாதங்கள் ஆனது. இதிலிருந்தே இந்த மாடலின் தேவை இன்னும் குறையவில்லை என்பது புரிகிறது.
முக்கியமானது என்னவென்றால், 2023-ஆம் நிதியாண்டில் 51,315 யூனிட் கிராண்ட் விட்டாரா கார்களையும், அடுத்த 2024-ஆம் நிதியாண்டில் 1,21,169 யூனிட் கிராண்ட் விட்டாரா கார்களையும் மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. ஹைப்ரிட் மற்றும் எஸ்-சிஎன்ஜி வெர்ஷனுக்கான தொடர்ச்சியான வலுவான தேவையே விற்பனை எண்ணிக்கையில் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம். இந்த நிதியாண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் இதுவரை 27,066 கிராண்ட் விட்டாரா கார்களை விற்பனை செய்துள்ளது, மேலும் பண்டிகை திருநாள் வருவதால் இந்த விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்