- இந்த மாடல் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வெர்ஷனில் வழங்கப்படுகிறது
- ஃப்ரோன்க்ஸ் இந்தியாவில் 2023 இல் தொடங்கப்பட்டது
மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ்ஸை ஏப்ரல் 2023 இல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 17 மாதங்களில், பலேனோ அடிப்படையிலான இந்த கிராஸ்ஓவர் மிகப்பெரிய விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது. மேலும், சந்தையில் வெற்றிகரமாக முன்னேறி வரும் மாருதி ஃப்ரோன்க்ஸில் இரண்டு லட்சம் கார்களை பதிவு செய்துள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்ட 10 மற்றும் 14 மாதங்களில் முறையே 1,00,000 மற்றும் 1,50,000 யூனிட்களின் விற்பனையை மாருதி ஃப்ரோன்க்ஸ் கடந்தது. ஆரம்பத்தில் ரூ. 7.46 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைத்தாலும், தற்போது, இந்த கூபே கிராஸ்ஓவரின் என்ட்ரி லெவல் ரூ. 7.51 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. வேரியன்ட்ஸைப் பொறுத்தவரை, இது சிக்மா, டெல்டா, டெல்டா ப்ளஸ், டெல்டா ப்ளஸ் (O), ஜீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய 6 வேரியன்ட்ஸில் கிடைக்கிறது.
ஃப்ரோன்க்ஸ் மூன்று இன்ஜின் விருப்பங்களுடன் வழங்கப்படுகிறது - 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல், 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின். டிரான்ஸ்மிஷன் விருப்பங்களைப் பொறுத்தவரை, இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன், ஃபைவ்-ஸ்பீட் ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்