- ஏப்ரல் 2023 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது
- அதன் 9,000 யூனிட்டை லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன
மாருதி சுஸுகி நிறுவனம், அதன் ஃப்ரோன்க்ஸ் ஸ்யுவியை நாட்டில் ஒரு லட்சம் யூனிட்களை விற்பனையை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாடல் ஏப்ரல் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 10 மாதங்களில் இந்த சாதனையை எட்டியுள்ளது. CY2022 இல் 10.4 சதவீதமாக இருந்த எஸ்யுவி பிரிவின் பங்கை CY2023 இல் 19.7 சதவீதமாக இரட்டிப்பாக்க கார் தயாரிப்பாளருக்கு உதவியுள்ளது.
பலேனோவை அடிப்படையாகக் கொண்டது இது, சிக்மா, டெல்டா, டெல்டா ப்ளஸ், ஜெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய ஐந்து வேரியன்ட்ஸில் வழங்கப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் ஆகிய இரண்டு இன்ஜின் விருப்பங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். தற்போது, இந்த மாடலின் விலை ரூ. 7.47 லட்சம் முதல் ரூ. 13.14 லட்சம் வரை (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்)
மாருதி சுஸுகியின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையின் மூத்த செயல் அதிகாரி ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா, ஒரு லட்சம் யூனிட் ஃப்ரோன்க்ஸ் விற்பனையின் போது, “இந்த காம்பேக்ட் எஸ்யுவிக்கான தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நாங்கள் எங்கள் போர்ட்ஃபோலியோவில் ஃப்ரோன்க்ஸ்ஸை சேர்த்துள்ளோம். 1 லட்சம் யூனிட்கள் விற்பனையானதை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 'மாருதி சுஸுகியின் எஸ்யுவி பிரிவின் பங்கை இரட்டிப்பாக்குவதில் ஃப்ரோன்க்ஸ் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது' என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்