- இதன் விலை ரூ. 7.46 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
- ஃப்ரோன்க்ஸ் ஐந்து வேரியன்ட்ஸில் கிடைக்கிறது
மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ் தற்போது இந்தியாவில் ரூ.7.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து முதல் முறையாக, பலேனோ அடிப்படையிலான இந்த கிராஸ்ஓவரில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மாருதி ஃப்ரோன்க்ஸ் சிக்மா, டெல்டா, டெல்டா ப்ளஸ், ஜெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய ஐந்து வேரியன்ட்ஸில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி விருப்பத்துடன் வாங்கலாம். இந்த மாடலின் பெட்ரோல் வேரியன்ட்க்கு ரூ.25,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ. 15,000 கேஷ் தள்ளுபடி மற்றும் ரூ. 10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அடங்கும். அனைத்து சலுகைகளும் டிசம்பர் 31, 2023 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
ஃப்ரோன்க்ஸ் 1.2-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரெடெட் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது, இது 89bhp மற்றும் 113Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இதில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, இது 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது, இது 99bhp மற்றும் 147Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்டர் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஃப்ரோன்க்ஸின் சிக்மா மற்றும் டெல்டா வேரியன்ட்ஸ் சிஎன்ஜி கிட் உடன் ரூ. 8.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வழங்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்