- மாருதி மானேசரில் ஒரு புதிய ப்ரொடக்ஷன் ஆலையை அமைதுள்ளது
- ஆண்டுக்கு 9 லட்சம் யூனிட்களை இலக்காக கொண்டு தொடர்ந்து உற்பத்தி செய்யப்படு
மாருதி சுஸுகி இந்தியா தனது மானேசர் வசதியில் கூடுதல் வாகன அசெம்பிளி லைனை அமைத்துள்ளது. மானேசரில் அதுவரை நிறுவப்பட்ட 3 உற்பத்தி ஆலைகளுடன் புதிதாக நிறுவப்பட்ட ஆலை-A சேர்க்கப்பட்டது. இந்த புதிய அசெம்பிளி லைன் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இந்த புதுப்பித்தலின் மூலம், இந்த வசதியின் மொத்த உற்பத்தி திறன் இப்போது ஆண்டுக்கு 9 லட்சம் யூனிட்களை எட்டியுள்ளது. இந்த ஆலை நவம்பர் 2007 இல் மொத்தம் 1 லட்சம் கார்களை உற்பத்தி செய்து அதன் முதல் மைல்ஸ்டோன்னை எட்டியது. மேலும், இந்த ஆண்டு பிப்ரவரியில் 95 லட்சம் கார்களை உற்பத்தி செய்து மற்றொரு முக்கிய மைல்ஸ்டோன்னை எட்டியது.
மாடல்களைப் பொறுத்தவரை, இந்த ஆலை வேகன் ஆர், எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோ, டிசையர், சியாஸ், பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் XL6 போன்ற கார்களை உற்பத்தி செய்கிறது. கூடுதலாக, மானேசர் ஆலை 95 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை உற்பத்தி செய்துள்ளது மற்றும் மாருதி சுஸுகி மூன்று கோடி கார் உற்பத்தி மைல்ஸ்டோன்னை எட்ட உதவுவதில் முக்கிய பங்காற்றியுள்ளது.
புதிய அசெம்பிளி லைன் வாடிக்கையாளர்களுக்கு மேலும் உதவும், புதிய ஆலையானது வாடிக்கையாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள மிகவும் பிரபலமான கார்களைப் பெறுவதற்கான வெயிட்டிங் பீரியட்டை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வளர்ந்து வரும் தேவையை சமாளிக்க, அடுத்த 7-8 ஆண்டுகளில் அதன் உற்பத்தி திறனை 40 லட்சம் யூனிட்டுகளாக மேலும் அதிகரிக்க மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்