- eVX எலக்ட்ரிக் எஸ்யுவி அடுத்த ஆண்டு லான்ச் ஆகும்
- இந்தியாவில் மாருதி வழங்கும் முதல் எலக்ட்ரிக் கார்
மாருதி சுஸுகி நிறுவனம் eVX-ஐ அதன் முதல் எலக்ட்ரிக் காராக இந்தியாவில் கொண்டு வரும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகும், அதற்கு முன்னதாக eVX இன் புதிய ஸ்பை ஷாட்ஸ் வெளியாகியுள்ளன. இது வரவிருக்கும் மிட்-சைஸ் eVX எலக்ட்ரிக் காரின் சமீபத்திய விவரங்கள் மற்றும் அம்சங்களை வெளிப்படுத்துகிறது.
இங்குள்ள ஸ்பை ஷாட்ஸில் காணப்படுவது போல், வரவிருக்கும் மாருதி சுஸுகி eVX எலக்ட்ரிக் கார் ஒரு ப்ரொடக்ஷன் மாடலில் சோதிக்கப்படும். புதிய லான்ச்-ஸ்பெக் காரில் காணப்படும் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டெயில் லைட்ஸ் இதில் அடங்கும். காரின் அடிப்பகுதியில் இன்வர்டெட் எல்-வடிவ வடிவமைப்பு மற்றும் காரின் மேற்புறத்தில் நீண்ட வரிசையுடன் டூ-பீஸ் எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப்ஸ் (டிஆர்எல்ஸ்) கொண்டுள்ளது.
மறுபுறம், டெயில்லைட்ஸ் பற்றி பேசுகையில், காரின் ஃப்ரண்ட்டில் உள்ள டிஆர்எல்களைப் போலவே பிரேக் லைன் பேட்டர்னுடன் கூடிய எல்இடி டெயில்லைட்ஸின் கோணத் தொகுப்பை eVX பெறுகிறது. மேலும், காரின் ரியரில் எல்இடி லைட் பார் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
மாருதி eVX இன்னும் பல புதிய அம்சங்களுடன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்கப்படுகிறது. இதில் 360 டிகிரி கேமரா, டிரைவ் மோட்ஸ்க்கான ரோட்டரி டயல், டூ-ஸ்போக் ஃபிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல், ஃபிலோட்டிங்க் சென்டர் கன்சோல், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஃப்ரண்ட் சீட் மற்றும் பல புதிய அம்சங்கள் இருக்கும்.
ஹூண்டாய் க்ரெட்டா இவி மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற எலக்ட்ரிக் எஸ்யுவிகளுடன் போட்டியிடும் eVX எலக்ட்ரிக் காரின் டெக்னாலஜி விவரக்குறிப்புகள் குறித்து மாருதி நிறுவனம் எதுவும் குறிப்பிடவில்லை. அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் மார்க்கெட்டின் தேவைகளின்படி, அதன் எலக்ட்ரிக் மோட்டார் 60kWh பேட்டரி பேக்குடன் இணைக்கப்படும், இது ஒருமுறை முழு சார்ஜில் 550 கிலோமீட்டர் ஓட்டும் வரம்பை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்