- eVX அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும்
- இது க்ரெட்டா இவி உடன் போட்டியிடும்
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமாகும், மாருதியின் புதிய eVX எலக்ட்ரிக் எஸ்யுவி மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஸ்பை படங்களில் இந்த இவி’யின் இன்டீரியரின் சிறந்த படங்களை நமக்குத் தருகின்றன
ஹூண்டாய் க்ரெட்டா இவி மற்றும் ஹோண்டா எலிவேட் இவி ஆகியவற்றுடன் போட்டியிடும் மாருதி eVX இன் சென்டரில் புதிய ரோட்டரி-ஸ்டைல் கியர் கன்ட்ரோலரைக் கொண்டுள்ளது. இது ஒரு குரோம் கார்னிஷ் மற்றும் நடுவில் ஒரு பட்டனைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, இது சென்டர் கன்சோலுக்கான க்ளோஸ் பிளாக் இன்ஸெர்ட்ஸ், புதிய டூ-ஸ்போக் ஃபிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல், டாஷ்போர்டில் பெரிய டூயல் திரைகள், பிளாக் மற்றும் ப்ரௌன் நிற இன்டீரியர் தீம், குரோம் இன்டீரியர் டோர் ஹேண்டல்ஸ் மற்றும் டோர்ஸில் க்ளோஸ் பிளாக் இன்ஸெர்ட்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது.
டிசைனைப் பொறுத்தவரை, 2025 மாருதி eVX ஆனது பிளாக்ட்-ஆஃப் கிரில், புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், மல்டி-ஸ்போக் அலோய் வீல்ஸ், சி-பில்லரில் பொருத்தப்பட்ட ரியர் டோர் ஹேண்டல்ஸ், இன்டெக்ரேட்டட் ஸ்பாய்லர், ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் ரியர் வைப்பர் மற்றும் வாஷர் ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய eVX இவி’யின் இன்ஜின் மற்றும் பேட்டரியை மாருதி சுஸுகி வெளியிடவில்லை. இந்த மாடல் 60kWh பேட்டரி பேக்குடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரு முழு சார்ஜில் 550 கிமீ தூரம் வரை செல்லக்கூடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்