- இரண்டு புதிய பெயர்களை ரெஜிஸ்டர் செய்துள்ளது
- நியூ ஜெனரேஷன் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும்
மாருதி சுஸுகியின் மூத்த நிறுவனமான சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் நாட்டில் இரண்டு புதிய பெயர்களை பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் இரண்டு புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தும் பிராண்ட் பற்றிய விவாதம் மேலும் அதிகரிக்கிறது. பிராண்ட் அதன் வரவிருக்கும் வாகனங்களுக்காக எஸ்குடோ மற்றும் டோர்க்னாடோ ஆகிய இரண்டு பெயர்களையும் பதிவு செய்துள்ளது.
ஜப்பானில் உள்ள சுஸுகியின் விட்டாரா எஸ்யுவிக்கு எஸ்குடோ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், டோர்க்னாடோ என்பது இதன் புதிய பெயர். எந்தெந்த வாகனங்களுக்கு இந்தப் பெயர்கள் வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அதே நேரத்தில், மாருதியின் முதல் முழு மின்சார கார் eVX க்கு டோர்க்னாடோ என்று பெயரிடப்படலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் பிராண்ட் இந்த இவி’யை லான்ச் செய்யலாம்.
மறுபுறம், மாருதி சுஸுகி தனது நியூ ஜெனரேஷன் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகியவற்றையும் சோதனை செய்து வருகிறது, இது வரும் சில மாதங்களில் வெளியிடப்படும். சமீபத்தில் டிசையர் எலக்ட்ரிக் சன்ரூஃப் உடன் ஸ்பை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்