- சைல்ட் சேஃப்டியில் இரண்டு ஸ்டார் மட்டுமே கிடைத்தது
- எர்டிகா 2019 இல் மூன்று ஸ்டார் குளோபல் என்கேப் மதிப்பீட்டைப் பெற்றது
குளோபல் என்கேபின் சோதனையில் மாருதி சுஸுகி எர்டிகா ஒரு ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ளது. இந்த எம்பீவி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது மற்றும் டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், இஎஸ்சி, சீட் பெல்ட் ரிமைன்டர் மற்றும் லோட் லிமிட்டருடன் கூடிய சீட் பெல்ட் ப்ரீ-டென்ஷனர் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. இது ரியர் சீட்ஸ்க்கு ஐசோஃபிக்ஸ் சைல்ட் சீட் ஆங்கரேஜ்களையும் கொண்டுள்ளது. அப்போ ஏன் ஒரே ஒரு ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்!
அடல்ட் சேஃப்டியில் எர்டிகா 23.63 புள்ளிகளையும், சைல்ட் சேஃப்டியில் 19.40 புள்ளிகளையும் பெற்றுள்ளது. அறிக்கையின்படி, டிரைவர் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்து நல்ல பாதுகாப்பைப் பெற்றன, ஆனால் ஃபுட்வெல் மற்றும் பாடி ஷெல் ஆகியவை நிலையற்றதாகவும், ஃப்ரண்ட் லோட் தாங்க முடியாமல் காணப்பட்டன.
எர்டிகாவின் டாப் வேரியன்ட்ஸில் சைட் ஏர்பேக்குகள், உயரத்தை சரிசெய்யக்கூடிய ஃப்ரண்ட் சீட் பெல்ட்கள் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா ஆகியவை அடங்கும். இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது, இது 102bhp ஆற்றலையும் 136.8Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வருகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்