- இந்த பிரிவில் 37.5 சதவீத சந்தைப் பங்கில் முன்னிலை வகிக்கிறது
- ஆரம்ப விலை ரூ. 8.69 லட்சம்
இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி எர்டிகா எம்பீவி மூலம் புதிய சாதனை படைத்துள்ளது. 2012 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, நாட்டில் 10 லட்சம் யூனிட் உள்நாட்டு விற்பனையைத் தாண்டியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் இந்த மைல்கல்லை எட்டிய அதிவேக எம்பீவி என்ற பெருமையை எர்டிகா பெற்றது.
மாருதி சுஸுகி எர்டிகா தற்போது 37.5 சதவீத சந்தைப் பங்குடன் இந்த பிரிவில் ஆதிக்கம் செலுத்துகிறது. இது LXi (O), VXi (O), ZXi (O), மற்றும் ZXi ப்ளஸ் ஆகிய நான்கு வேரியன்ட்ஸில் ரூ. 8.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது.
2012 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, எம்பீவி விரைவில் பிரபலமடைந்தது மற்றும் ஒரு வருடத்திற்குள் ஒரு லட்சம் யூனிட் விற்பனையை எட்டியது. பின்னர், 2019 ஆம் ஆண்டில், எர்டிகா ஐந்து லட்சம் யூனிட் விற்பனையைத் தாண்டியது மற்றும் அதன் நடைமுறை மற்றும் நம்பகத்தன்மையுடன் வடிக்கையர்களை தொடர்ந்து ஈர்த்தது.
மாருதி சுஸுகி எர்டிகாவின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட்டின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையின் மூத்த நிர்வாக அதிகாரி ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா, “எர்டிகா ஒரு எம்பீவியின் கருத்தை ஸ்டைலான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சலுகையாக மறுவரையறை செய்துள்ளது. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட விரும்பும், ஒவ்வொரு கட்டத்திலும் கூட்டு அனுபவங்களை உருவாக்க விரும்பும் வாலிபர், தொழில்நுட்ப உணர்வுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு விருப்பமான தேர்வாக மாறியுள்ளது. இந்த எர்டிகா இளம் நகர்ப்புற வாடிக்கையாளர்களின் அதிகரிப்பால், எம்பீவிக்கான முதல்முறை வாடிக்கையாளர்கள் 41 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. எர்டிகா வாங்குபவர்களில் 66 சதவீதம் பேர் இதை முன்னரே தீர்மானிக்கப்பட்ட தேர்வாகக் கருதுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்டைலான, பல்துறை மற்றும் நம்பகமான எர்டிகா நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்தைகளில் 37.5 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டு நாடு முழுவதும் வெற்றி பெற்றுள்ளது” என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்