- பல்வேறு வாரன்டி தொகுப்புகள் வழங்கப்படுகின்றன
- இந்த தொகுப்புகள் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
மாருதி சுஸுகி அதன் உத்தரவாத திட்டத்தில் பல முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. ஸ்டாண்டர்ட் உத்தரவாதம் மற்றும் எக்ஸ்டென்டெட் உத்தரவாத திட்டங்களில் நிறுவனம் செய்த அனைத்து முக்கிய மாற்றங்களும் ஜூலை 9 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்டாண்டர்ட் வாரன்டி
முன்பு மாருதி சுஸுகி அதன் ஸ்டாண்டர்ட் உத்தரவாதத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ (எது முந்தையது) உத்தரவாதத்தை வழங்கியது, அது இப்போது மூன்று ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ (எது முந்தையது) என மாற்றப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் நுகர்பொருட்கள் மற்றும் பிற மெக்கானிக்கல் கம்போனேண்ட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஜின், டிரான்ஸ்மிஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் ஏசி சிஸ்டங்கள் மட்டுமே இதன் கீழ் வரும்.
நாடு முழுவதும் அமைந்துள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்க்கு சென்று உத்தரவாதக் காலத்தின் போது இலவசமாக பழுதுபார்க்கும் வசதியை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது நிம்மதியளிக்கும் ஒரு விஷயம்.
எக்ஸ்டென்டெட் வாரன்டி
மாருதி சுஸுகி அதன் ஸ்டாண்டர்ட் உத்தரவாதத்துடன் அதன் எக்ஸ்டென்டெட் உத்தரவாத திட்டத்திலும் பல முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இதன் கீழ், வாடிக்கையாளர்களுக்கு மூன்று வகையான பேக்கேஜ்களை தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது. முதலாவதாக, நான்கு ஆண்டுகள் அல்லது 1,20,000 கிமீ உத்தரவாதத்தைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், பிளாட்டினம் தொகுப்பைப் பெறுவதற்கான விருப்பம் உள்ளது.
இது தவிர, ஐந்து ஆண்டுகள் அல்லது 1,40,000 கிமீ வரை உத்தரவாதத்தை நீட்டிக்க விரும்புவோர் ராயல் பிளாட்டினம் பேக்கேஜைப் பெறலாம். அதே நேரத்தில், ஆறு ஆண்டுகள் வரை உத்தரவாதத்தின் பலனைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், சொலிடர் பேக்கேஜைத் தேர்வுசெய்ய விருப்பம் உள்ளது, அதில் ஆறு ஆண்டுகள் அல்லது 1,60,000 கிமீ வரை உத்தரவாதத்தின் பலனைப் பெறுவார்கள். இந்த அனைத்து உத்தரவாத பேக்கேஜ்களையும் பெற, வாடிக்கையாளர்கள் எந்த சுஸுகி சேவை மையத்திற்கும் செல்லலாம்.
சிறப்பு விஷயம் என்னவென்றால், நிறுவனம் இப்போது 11 ஹை-வேல்யூ பார்ட்ஸ்ஸை இதில் உள்ளடக்கியது, முன்பு இது ஸ்டாண்டர்ட் உத்தரவாதத்தை வாரன்டியில் கவர் செய்யப்படாது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்