- என்கேஜ் எம்பீவி ஜூலை 5 ஆம் தேதி அறிமுகம் ஆகும்
- இது டொயோட்டா இனோவா ஹைகிராஸை அடிப்படையாகக் கொண்டது
ஜூலை 5 ஆம் தேதி அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, மாருதி சுஸுகி என்கேஜ் எம்பீவி பொதுச் சாலைகளில் எந்தவித மறைவும் இல்லாமல் ஸ்பை டெஸ்டிங் செய்யப்பட்டது.
மாருதி சுஸுகி என்கேஜின் ஃப்ரண்ட் டிசைன்
நாங்கள் முன்பு தெரிவித்தது போல், இது ஹெக்ஸாகோணல் மெஷ் பேட்டர்னுடன் டூ-ஸ்லாட் குரோம் கிரில்லைப் பெறுகிறது. இது தவிர, ஃப்ரண்டில் டொயோட்டாவின் ஒத்ததாக உள்ளது, இதில் லோவர்-பம்பர் பொருத்தப்பட்ட ஹோரிசொன்டள் டிஆர்எல்ஸ் மற்றும் பரந்த ஏர் டாம்ஸ் உள்ளன. இது தவிர, புதிய த்ரீ-பிளாக் எல்இடி டெயில் லைட்ஸுடன் புதிய டூயல்-டோன் அலோய் வீல்ஸும் இதில் உள்ளன.
என்கேஜ் எம்பீவியின் எதிர்பார்க்கப்படும் அம்சங்களின் பட்டியல்
உட்புறத்தில், என்கேஜ் எம்பீவி ஆனது, ஃபிலோடிங்க் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டாஷ்போர்டில் பொருத்தப்பட்ட கியர் லெவருடன், இனோவா ஹைகிராஸைப் போன்ற டாஷ்போர்டுஅமைப்பைப் பெறும். பனோரமிக் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பவர்டு ஒட்டோமான் சீட்ஸ், வென்டிலேடெட் மற்றும் பவர்டு முன்வரிசை இருக்கைகள், க்ரூஸ் கண்ட்ரோல், க்ளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா மற்றும் ஏடாஸ் டெக்னாலஜி ஆகியவையும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி என்கேஜ் இன்ஜின் விருப்பங்கள்
இன்ஜினை பொறுத்தவரை, பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் அமைப்புகளில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
என்கேஜ் எம்பீவியின் போட்டியாளர்கள்
அறிமுகப்படுத்தப்பட்டதும், இந்த மாடல்டொயோட்டா இனோவா ஹைகிராஸ், டாடாசஃபாரி, எம்ஜிஹெக்டர் ப்ளஸ், கியாகேரன்ஸ் மற்றும் இந்த செக்மென்ட்டின் மற்ற கார்ஸுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்