- 1983 இல் இதன் ப்ரொடக்ஷன் இந்தியாவில் தொடங்கப்பட்டது
- தற்போது இந்தியாவில் இரண்டு ப்ரொடக்ஷன் ஃபேக்டரி உள்ளன
இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி, நாட்டில் 3 கோடி வாகனங்களை உற்பத்தி செய்து புதிய சாதனை படைத்துள்ளது. மாருதி தனது கார்களை 1983 இல் இந்தியாவில் உற்பத்தி செய்யத் தொடங்கியது, இந்த மைல்கல்லை அடைய 40 ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் ஆனது. தற்போது இந்தியாவில் 18 மாருதி கார்கள் விற்பனைக்கு உள்ளன, அவற்றில் 9 கார்கள் அரீனா டீலர்ஷிப் மூலமாகவும், 8 கார்கள் நெக்ஸா டீலர்ஷிப் மூலமாகவும் விற்கப்படுகின்றன.
ஹரியானாவில் உள்ள ஆலையில் 2.68 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் தயாரிக்கப்பட்டன, 32 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் எம்எஸ்ஐஎல் (MSIL) இன் துணை நிறுவனமான சுஸுகி மோட்டார் குஜராத்தில் தயாரிக்கப்பட்டன. ஆல்டோ, ஸ்விஃப்ட், வேகன்- ஆர், M800, டிசையர், ஆம்னி, பலேனோ, ஈகோ, பிரெஸ்ஸா மற்றும் எர்டிகா உள்ளிட்ட 10 மாடல்கள் இந்த சாதனையை எட்டுவதற்கு பங்களித்துள்ளன.
இந்த நிகழ்வில், மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிசாஷி டேகுச்சி கூறுகையில், 1983 ஆம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கியதிலிருந்து ஆண்டுதோறும் எங்கள் தயாரிப்புகள் மீது நம்பிக்கை வைத்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். 'மேக் இன் இந்தியா' முன்முயற்சிக்கு ஏற்ப உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாட்டில் எங்களது செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தி வருகிறோம். மேலும், இந்தியாவில் இருந்து மொத்த வாகன ஏற்றுமதியில் மாருதியின் பங்கு 40 சதவீதமாக உள்ளது என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்