- இரண்டு வேரியன்ட்ஸ்ஸில் வழங்கப்படுகிறது
- ஸ்டாண்டர்ட் பிரெஸ்ஸாவின் ஆக்சஸரீஸ் வெர்ஷனாகும்
மாருதி சுஸுகி, ஆக்சஸரீஸ் வெர்ஷன்னை அறிமுகப்படுத்தி அதன் வரிசையின் விற்பனையை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில், ஆட்டோமேக்கர் அதன் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக்கின் ட்ரீம் சீரிஸ் வெர்ஷன்னை அறிமுகப்படுத்தியது, இது ஃப்ரோன்க்ஸின் வேலோஸிட்டி வெர்ஷன்க்கு முன்னதாக இருந்தது. இப்போது, பிரெஸ்ஸாவும் அதன் அர்பானோ வேரியன்ட்டும் ரூ. 8.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் பட்டியலில் இணைந்துள்ளது.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா அர்பானோ எடிஷன், LXi மற்றும் VXi என இரண்டு வேரியன்ட்ஸில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் வெர்ஷன்ஸில் கிடைக்கிறது. பிரெஸ்ஸா அர்பானோ வெர்ஷனின் LXi வேரியன்ட்டில், ரிவர்ஸ் கேமரா, ஸ்பீக்கர்களுடன் கூடிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபாக் லேம்ப்ஸ், ஃப்ரண்ட் மற்றும் ரியர் ஸ்கிட் பிளேட்ஸ், ஃப்ரண்ட் கிரிலில் குரோம் கார்னிஷ், சைட் மோல்டிங் மற்றும் வீல் ஆர்ச் கிட் போன்ற அம்சங்களை பெறுகிறது.
இதற்கிடையில், VXi அர்பானோ வேரியன்ட்டில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஃபாக் லேம்ப்ஸ், டேஷ்போர்டு கார்னிஷ், சைட் மோல்டிங்ஸ், வீல் அர்ச் கிட், மெட்டல் சீல் கார்ட், நம்பர் ப்ளேட் ஃபிரேம் மற்றும் 3D ஃபுளோர் மேட் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. விலையைப் பற்றி பேசினால், LXi மற்றும் VXi ஆகியவற்றின் ஆக்சஸரீஸ் பேக்கின் விலை முறையே ரூ. 42,000 மற்றும் ரூ. 18,500 ஆகும்.
இதன் இன்ஜின் விருப்பங்களில் எந்த மாற்றமும் இல்லை. அர்பானோ எடிஷன் ஸ்டாண்டர்ட் வேரியன்ட்ஸின் அதே இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் தொடர்கிறது.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா அர்பானோ எடிஷனின் வேரியன்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
வேரியன்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலை |
LXi எம்டீ | ரூ. 8.49 லட்சம் |
LXi சிஎன்ஜி எம்டீ | ரூ. 9.44 லட்சம் |
VXi எம்டீ | ரூ. 9.84 லட்சம் |
VXi சிஎன்ஜி எம்டீ | ரூ. 10.68 லட்சம் |
VXi ஏடீ | ரூ. 11.13 லட்சம் |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்