- பிரெஸ்ஸாவின் விற்பனை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது
- நான்கு வேரியன்ட்ஸில் கிடைக்கும்
இந்தியாவில் பிரெஸ்ஸா எஸ்யுவி விற்பனையில் மாருதி சுஸுகி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த கார் தயாரிப்பு நிறுவனம் பிரெஸ்ஸா மற்றும் விட்டாரா பிரெஸ்ஸாவின் சுமார் 10 லட்சம் யூனிட்களை நாட்டில் விற்பனை செய்துள்ளது. ஃபர்ஸ்ட் ஜெனரேஷன் பிரெஸ்ஸா 2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிகிறோம்.
மாருதியின் காம்பாக்ட் எஸ்யுவி ஆனது 2024 நிதியாண்டில் டாடா நெக்ஸானை விஞ்சுவதன் மூலம் அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி ஆனது. ஒவ்வொரு மாதமும் சுமார் 13,000 முதல் 15,000 யூனிட் பிரெஸ்ஸா விற்பனை செய்யப்படுகிறது.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ரூ. 8.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இது LXi, VXi, ZXi மற்றும் ZXi ப்ளஸ் ஆகிய நான்கு வேரியன்ட்ஸில் வாங்கலாம். இந்த எஸ்யுவி ஆனது 103bhp மற்றும் 138Nm டோர்க்கை உருவாக்கும் சிஎன்ஜி கிட் உடன் 1.2-லிட்டர் என்ஏ இன்ஜினைக் கொண்டுள்ளது. இதில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்