- இது நான்கு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது
- இந்தியாவில் இதன் விலை ரூ. 6.66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இல் தொடங்குகிறது
மாருதி சுஸுகி தனது அரேனா மற்றும் நெக்ஸா ரேஞ்சின் விலைகளை ஜனவரி 2024 இல் மாற்றியுள்ளது. இதில் பலேனோ ஹேட்ச்பேக், தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்ஸின் விலைகள் ரூ. 5,000 அதிகரித்துள்ளது. இப்போது ரூ. 6.66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது.
மாருதி சுஸுகி பலேனோ சிக்மா, டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய நான்கு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. அதன் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் விலையில் எந்த மாற்றமும் இல்லை, அதே நேரத்தில் சிஎன்ஜி ட்ரிம்களில் உட்பட அனைத்து வேரியன்ட்ஸிலும் ரூ. 5,000 விலை அதிகரிப்பில் உள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு, மேனுவல் வேரியன்ட்க்கான விலைகள் இப்போது ரூ. 6.66 லட்சத்தில் தொடங்குகின்றன, அதே நேரத்தில் ஆட்டோமேட்டிக் மற்றும் சிஎன்ஜி ரேஞ்சில் முறையே ரூ. 6.93 லட்சம் மற்றும் ரூ. 8.40 லட்சம் (அனைத்து விலைகள், எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ளன.
பலேனோவில் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் உள்ளது, இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 88bhp மற்றும் 113Nm டோர்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும், அதன் டெல்டா மற்றும் ஜெட்டா வேரியன்ட்ஸில் நிறுவனம் பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் விருப்பத்தைப் பெறுகிறது, அதனுடன் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்