- பலேனோ நான்கு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது
- என்ட்ரி-லெவல் வேரியண்ட்ஸ்க்கு அதிகபட்ச தள்ளுபடிகள் உள்ளது
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்ஸில் ஒன்றான மாருதி சுஸுகி பலேனோ ஜூலை 2023க்கு ரூ.45,000 வரை தள்ளுபடியுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ரூ.6.61 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது மற்றும் விலை ரூ.9.88 லட்சம் (அனைத்து விலைகள், எக்ஸ்-ஷோரூம்) டாப்-ஸ்பெக் வேரியண்ட்டிற்கு. மாடலில் கேஷ் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ஸ்கிராப் போனஸ் போன்ற பலன்களை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
மாருதி சுஸுகி பலேனோ வேரியண்ட்ஸ் மற்றும் சலுகைகள் பற்றிய விவரங்கள்
பலேனோ ஹேட்ச்பேக், சிக்மா, டெல்டா, ஜெட்டாமற்றும் ஆல்ஃபா ஆகிய நான்கு வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. ஜூலை 2023 இல் மாருதி சுஸுகி பலேனோவின் வேரியண்ட் வாரியான தள்ளுபடிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
தள்ளுபடிகள் | சிக்மாமற்றும் டெல்டா வேரியண்ட்ஸ் | ஜெட்டா மற்றும் ஆல்ஃபா வேரியண்ட்ஸ் | சிஎன்ஜி வேரியண்ட்ஸ் |
கேஷ் தள்ளுபடிகள் | ரூ. 20,000 | ரூ. 10,000 | ரூ. 10,000 |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் | ரூ. 20,000 | ரூ. 20,000 | ரூ. 20,000 |
ஸ்கிராப் போனஸ் | ரூ. 5,000 | ரூ. 5,000 | ரூ. 5,000 |
மேலே குறிப்பிடப்பட்ட சலுகைகள் இருப்பிடம், டீலர்ஷிப், வேரியண்ட் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மாறுபடலாம். மேலும் தகவலைப் பெற அருகிலுள்ள மாருதி-அங்கீகரிக்கப்பட்ட நெக்ஸா டீலர்ஷிப்ஸைத் தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.
பலேனோ ஹேட்ச்பேக்கின் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
பலேனோ 1.2 லிட்டர் ஃபோர் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மற்றும் சிஎன்ஜி விருப்பத்துடன் வருகிறது. புதிய BS6 ஃபேஸ் 2 மற்றும் ஆர்டிஇ விதிமுறைகளை பூர்த்தி செய்ய பவர்ட்ரெயின் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இது ஸ்டாண்டர்ட் மோடில் 88bhp மற்றும் 113Nm டோர்க் உற்பத்தி செய்ய மோட்டார் டியூன் செய்யப்பட்டுள்ளது, அதேசமயம், சிஎன்ஜி மோடில் 76bhp மற்றும் 98.5Nm டோர்க் உள்ளது. டிரான்ஸ்மிஷனில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட் மூலம் இயக்கப்படுகின்றன.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்