• ஆறு ஆண்டுகளில் 70 லட்சம் வாடிக்கையாளர்கள்யை சேர்துள்ளனர்
• இந்தியாவில் 2,392 நகரங்களில் அரீனா விற்பனை நிலையங்கள் உள்ளன
மாருதி சுஸுகி இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு அரீனா டீலர்ஷிப் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியது. அதன் நிறுவப்பட்ட ஆறு ஆண்டுகளில், சப்-பிராண்ட் நாட்டில் 70 லட்சம் வாடிக்கையாளர் சாதனையை தாண்டியுள்ளது. அரீனா ரேஞ்சில் தற்போது ஈகோ, ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோ, வேகன்-ஆர், ஸ்விஃப்ட், டிசையர், பிரெஸ்ஸா மற்றும் எர்டிகா உள்ளிட்ட ஒன்பது மாடல்ஸ் விற்பனையில் உள்ளன.
தற்போது, அரீனா இந்தியாவில் 2,392 நகரங்களில் 2,853 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. விற்பனையைப் பொறுத்தவரை, 2023-24 நிதியாண்டில் மாருதி சுஸுகியின் ஒட்டுமொத்த விற்பனையில் அரீனா மாடல்ஸ் 68 சதவீத பங்களிப்பை அளித்துள்ளன.
இந்த சாதனையை பற்றி பேசிய மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் சீனியர் எக்ஸிக்யூடிவ் ஆஃபீஸர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா, “ஆறு வருடங்களில் 70 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை அரினா சேனலை தொட முடிந்தது. வாடிக்கையாளரின் சேனலின் மீதான நம்பிக்கைக்கு இது ஒரு உண்மையான சான்றாகும், இது அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கும் மீறுவதற்கும் எங்களை ஊக்குவிக்கிறது. 2,853 நவீன விற்பனை நிலையங்களுடன், அதன் இளம் மற்றும் ஆற்றல்மிக்க வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை வழங்குகிறது. அரீனா சேனலில் ஒப்பிடமுடியாத, தடையற்ற மற்றும் இணைக்கப்பட்ட கார் வாங்கும் அனுபவம் உள்ளது. தொடர்ந்து வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், உலகளாவிய அளவுகோல்களுக்கு இணையான அனுபவங்களை அவர்களுக்கு வழங்குவதற்கும் அதன் முயற்சியில், அரீனா சேனல் இந்திய கார் வாங்குபவர்களுக்கு உறுதியான தேர்வாக உருவெடுத்துள்ளது.”
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்