- இது முதலில் 2000 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது
- இது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜினிலும் வழங்கப்படுகின்றன
மாருதி சுஸுகி ஆல்டோ 2000 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் 2023 ஆம் ஆண்டில் நாட்டில் அதிகம் விற்பனையாகும் காராக மாறி உள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில் ஹேட்ச்பேக் 4.5 மில்லியன் வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்டுள்ளது, இது ஒரு சாதனையாகும். இது தற்போது நான்கு வேரியண்ட்ஸில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் ரூ.3.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது.
ஆல்டோவின் வரலாறு
ஆல்டோ முதன்முதலில் 2000 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து முதல் ஜெனரேஷன்ஆல்டோ k10 சீரிஸ் 2010 இல் வெளியிடப்பட்டது. 2016 ஆம் ஆண்டில், ஆல்டோ 3 மில்லியன் விற்பனையை நிறைவு செய்தது, அதன் பிறகு அடுத்த எட்டு ஆண்டுகளில் 1.5 மில்லியன் மக்கள் ஹேட்ச்பேக்கை வாங்கியுள்ளனர்.
ஆல்டோ K10 ஹேட்ச்பேக் இன்ஜின் விவரங்கள்
ஆல்டோ K10 மூன்றாம் ஜெனரேஷன், 1.0 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹேட்ச்பேக்கின் VXi வேரியண்ட் நிறுவனத்தால் பொருத்தப்பட்ட சிஎன்ஜி விருப்பத்தையும் பெறும் இதன் விலை ரூ.5.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
அதிகாரப்பூர்வ அறிக்கை
மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட்டின் சீனியர் எக்ஸிக்யூடிவ் ஆஃபிசர், மார்கெட்டிங் மற்றும் சேல்ஸின் தலைவரான ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “கடந்த 2 தசாப்தங்களாக, ஆல்ட்டோ பிராண்ட் எங்கள் வாடிக்கையாளர்களுடன் வலுவான உறவை உருவாக்கியுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில் ஆல்டோவின் பயணத்தில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். 45 லட்சம் வாடிக்கையாளர்கள் என்ற சாதனையே எட்டுவது, இன்றுவரை எந்த பிராண்டாலும் அடையாத சாதனையாகும்” என்று கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்