- ஸ்டீயரிங் கியர்பாக்ஸ் அசெம்பிளி குறைபாடுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- சேதமடைந்த பகுதி இலவசமாக மாற்றப்படும்
மாருதி சுஸுகி பிராண்ட், நாடு முழுவதும் உள்ள அதன் என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் ஆல்டோ K10 மாடலின் சில யூனிட்களை தானாக முன்வந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. ஸ்டீயரிங் கியர்பாக்ஸ் அசெம்பிளியில் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் சிக்கலைச் சோதித்து சரிசெய்வதற்காகவே திரும்ப அழைக்கப்படுவதாக அது கூறுகிறது. இந்த பிரச்சனையால் ஆல்டோ K10 காரின் ஸ்டீயரிங் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மாருதியின் கூற்றுப்படி, மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் இந்த சிக்கல் காரின் ஸ்டீயரிங் பாதிக்கலாம். மொத்தம் 2,555 யூனிட்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன, மேலும் குறைபாடுள்ள பகுதியை மாற்றும் வரை வாகனம் ஓட்டுவதையோ அல்லது வாகனத்தைப் பயன்படுத்துவதையோ தவிர்க்குமாறு இந்த மாடலின் உரிமையாளர்களுக்கு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மாருதி சுஸுகியின் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப்கள் பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட பகுதியைச் சரிபார்ப்பார்கள். கூடுதலாக, ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், அந்த பகுதி வாடிக்கையாளருக்கு செலவில்லாமல் மாற்றப்படும், அதாவது ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால், அது இலவசமாக மாற்றப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்