அறிமுகம்
மாருதி சுஸுகி ஆல்டோ K10 கார் தயாரிப்பாளரின் போர்ட்ஃபோலியோவில் ஆல்டோ 800க்கு மேல் இருக்கும் ஒரு என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் ஆகும். இந்த வாகனத்தை நாங்கள் சமீபத்தில் ஓட்டியுள்ளோம், அதன் விரிவான ரோடு டெஸ்ட் விவரங்கள் இதோ.போன மாடலுடன் இந்த மாடலில் அதிக கம்ஃபர்ட் மற்றும் அதிக இடமும் இருப்பதாக நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆல்டோவின் ஃப்ரண்ட் கேபின் ஸ்பேஸ்
ஒருவர் தரையில் இருந்து 630 மிமீ உயரத்தில் அமர்ந்திருப்பதால், முன் இருக்கைகளில் அதிகம் குனிந்து கொள்ளாமல் எளிதாக ஏறலாம். சிறந்த லெக்ரூம் 750 மிமீ, அதிகபட்ச முழங்கால்க்கு இடையே உள்ள 870 மிமீ, மற்றும் 990 மிமீ ஹெட்ரூம் போதுமான இடம்ஆகும், ஆனால் 1,200 மிமீ தோள்பட்டைக்குஇடையே உங்களை பயணிகளுக்கு நெருக்கமாக உட்கார வைக்கிறது. அதன் இருக்கைகளைப் பற்றி பேசுகையில், 470 மிமீ இருக்கை தளம் மற்றும் 560 மிமீ பேக்ரெஸ்ட் உயரம் கொடுக்கப்பட்டுள்ளது, இது பயணிகளுக்கு நல்ல பின் ஆதரவை அளிக்கிறது.
ஆல்டோவின் ரியர் கேபின் ஸ்பேஸ்
மாருதி சுஸுகிஆல்டோK10 இல் பின் சீட்ஸில் அமர்வது அவ்வளவு கடினம் அல்ல. இதில் ஷோல்டர் ரூம் குறைவாக இருப்பதால், மூன்றாவது பயணி நடுவில் அமர்வதில் சில சிக்கல் இருக்கலாம். 640 மிமீ லெக்ரூம் மற்றும் 880 மிமீ க்னீரூம், முன்பு இருந்ததை விட பின்புறத்தில் அதிக இடம் இருந்தாலும், அது வசதியாக இல்லை. இரண்டாவது வரிசை இருக்கை ஒரு பிளாட் பெஞ்ச் போன்றது, ஆனால் அது 440 மிமீ குறுகிய தளத்துடன் இருப்பதால் வசதியாக இல்லை. இது தரையிலிருந்து 370 மிமீ தொலைவில் அமைந்துள்ளது, இது குறைந்த அன்டர் தையி ஆதரவை அளிக்கிறது.
ஆல்டோ K10 பூட் ஸ்பேஸ் கபாஸிட்டி
ஆல்டோ K10 யில் 214 லிட்டர் பூட் ஸ்பேஸைவழங்குகிறது,இக்டு குறைவாக இருக்கு. இதில் மிஞ்சி போனால் நான்கு பேக்ஸ் வைக்க முடியும். இதில், நல்ல விஷயம் என்னவென்றால், அது தரையில் இருந்து மிக உயரமாக இல்லை, அது முழுமையாக திறக்கிறது. அதன் கீழே ஒரு ஃபுல் ஸ்பேர் டயரும் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்க பயணிகளுக்கு லேசான சாமான்களை வைத்துக்கொள்ள ஒரு பார்சல் ட்ரே வழங்கப்பட்டுள்ளது.
முடிவுரை
Maruti Suzuki Alto K10 ஒரு மலிவு விலையில் உள்ள சிறிய கார் ஆகும். இது ஒரு சிறிய குடும்பத்திற்கு அல்லது நகரத்திற்குள் தினசரி பயன்பாட்டிற்கு போதுமான இன்டீரியர் இடத்தைக் கொண்டுள்ளது. அதன் பர்ஃபார்மன்ஸ், ரியல்-வேர்ல்டு ஃப்யூல்எஃபிஷியன்சி மற்றும் பலவற்றைப் பற்றி மேலும் அறிய, எங்கள் விரிவான ரோடு-டெஸ்டை இங்கே பார்க்கலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்