- மாருதியின் ஸ்விஃப்ட் தான் அதிகம் விற்பனையாகும் மாடல் ஆகும்
- மொத்தம் 2 லட்சம் யூனிட்ஸ் இன்னும் டெலிவரி செய்யப்படவில்லை
கடந்த 12 மாதங்களில் மாருதி தனது எஸ்யுவி பாடி ஸ்டைல் ரேஞ்சில் மூன்று புதிய வாகனங்களை சேர்த்துள்ளது.கார் தயாரிப்பாளரின் இந்த நடவடிக்கை அதன் எதிர்கால வளர்ச்சிக்கு, குறிப்பாக நகர்ப்புறங்களில் ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.நகரங்களில் ஹை-ரைடிங்க் வாகனங்கள் அதிகம் விரும்பப்பட்டாலும், கிராமப்புறங்களில் மாருதியின் எஸ்யுவி அல்லாத மாடல்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, மாருதி 2.21 லட்சம் யூனிட் ஹேட்ச்பேக், செடான் மற்றும் எம்பீவி கார்களை விற்பனை செய்துள்ளது, இதில் 81,000 யூனிட் எஸ்யுவி மாடல்களும் அடங்கும். கடந்த ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கிராமப்புறங்களில் 11 சதவீத வளர்ச்சி விகிதம், நகர்ப்புறங்களில் 8 சதவீதமாக உள்ளது.
கிராமப்புறங்களில் எஸ்யுவி அல்லாத மாடல்களுக்கான அதிக தேவைக்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன, அவற்றில் முதன்மையானது, முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கு என்ட்ரி-லெவல் எஸ்யுவிகள் அதிக விலை கொண்டவை என்று மாருதி கூறியது.மேலும், மாருதி அதன் எஸ்யுவி ரேஞ்சில் டீசல் விருப்பத்தை கொண்டிருக்கவில்லை, குறிப்பாக ப்ரீமியம் கார்களுக்கு இது முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.தற்போது, ஹூண்டாய், கியா மற்றும் எம்ஜி நிறுவனங்கள் பல டீசலில் இயங்கும் ப்ரீமியம் கார்களைக் கொண்டுள்ளன. இது தவிர, இது ட்ரென்ட்க்கு ஏற்ற மாதிரி மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் கிராமப்புறங்களில் மாருதியின் சிறிய கார்களின் பங்கு 48 சதவீதத்தில் இருந்து 43 சதவீதமாக 5 சதவீதம் சரிந்துள்ளது.
எமிஷன் விதிகள் மாற்றுவதால் டீசல் கார்களின் விலை அதிகமாகும். மேலும், பெட்ரோல், சிஎன்ஜி, எலக்ட்ரிக் மற்றும் பயோகேஸ் கார்களில் முதலீடு செய்வது மாருதி சுஸுகிக்கு சாதகமாக இருக்கும் மற்றும் கிராமப்புறங்களில் அதன் எஸ்யுவிகளின் விற்பனையை அதிகரிக்க முடியும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்