- இது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி விருப்பங்களில் வழங்கப்படுகிறது
- இந்தியாவில் ஆரம்ப விலை ரூ.4.26 லட்சம்
மாருதி சுஸுகி ஆகஸ்ட் 2023 இல் எஸ்-பிரஸ்ஸோவை தற்போது ரூ.54,000 வரை தள்ளுபடியுடன் வழங்க பட்டியலிடப்பட்டுள்ளது. என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் நான்கு வேரியண்ட்ஸில் ஆரம்ப விலை ரூ.4.26 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த சலுகைகள் கேஷ் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் வடிவில் கிடைக்கின்றன.
மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ தள்ளுபடிகள்
எஸ்-பிரஸ்ஸோ வெர்ஷனை பொறுத்து ரூ.35,000 வரை கேஷ் தள்ளுபடியைக் கொண்டுள்ளது. பின்னர் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் முறையே ரூ.15,000 மற்றும் ரூ.4,000 ஆகும்.
வேரியண்ட்/வெர்ஷன் | தள்ளுபடி |
மேனுவல் வேரியண்ட்ஸில் கேஷ் தள்ளுபடிகள் | ரூ.35,000 வரை |
ஆட்டோமேட்டிக் வேரியண்ட்ஸில் கேஷ் தள்ளுபடிகள் | ரூ.30,000 வரை |
சிஎன்ஜி வெர்ஷனில் கேஷ் தள்ளுபடிகள் | ரூ.35,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் | ரூ. 15,000 |
கார்ப்பரேட் தள்ளுபடிகள் | ரூ. 4,000 |
மேற்கூறிய சலுகைகளை 31 ஆகஸ்ட் 2023 வரை நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மாருதி சுஸுகி அரீனா டீலர்ஷிப்ஸில் பெறலாம்.
எஸ்-பிரஸ்ஸோவின் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
எஸ்-பிரஸ்ஸோ 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் ஃபேக்டரி பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் விருப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மோட்டார் 66bhp மற்றும் 89Nm டோர்க்கை உருவாக்குகிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்