ஜிம்னி பேஸ் வேரியண்ட் விலை மற்றும் டெலிவரி
மாருதி சுஸுகிஇந்தியாவில் இன்று ஜிம்னியை அறிமுகப்படுத்தப்பட்டது, பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.12.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த எஸ்யுவியின் டெலிவரி உடனடியாகவரும் என்று கார் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் டாப் 10 நகரங்களில் மாருதி சுஸுகி ஜிம்னியின் ஆன்-ரோடு விலை:
நகரங்கள் | பேஸ் வேரியண்ட் (ஜெட்டா எம்டீ) | டாப் வேரியண்ட் (ஆல்ஃபா ஏடீ டூயல்-டோன்) |
சென்னை | ரூ. 15.50 லட்சம் | ரூ. 18.31 லட்சம் |
கோயம்புத்தூர் | ரூ. 12.74 லட்சம் | ரூ. 15.05 லட்சம் |
மதுரை | ரூ. 12.74 லட்சம் | ரூ. 15.05 லட்சம் |
திருச்சி | ரூ. 12.74 லட்சம் | ரூ. 15.05 லட்சம் |
சேலம் | ரூ. 12.74 லட்சம் | ரூ. 15.05 லட்சம் |
பாண்டிச்சேரி (யூனியன் பிரதேசம்) | ரூ. 12.74 லட்சம் | ரூ. 15.05 லட்சம் |
வேலூர் | ரூ. 12.74 லட்சம் | ரூ. 15.05 லட்சம் |
தூத்துக்குடி | ரூ. 12.74 லட்சம் | ரூ. 15.05 லட்சம் |
திருப்பூர் | ரூ. 12.74 லட்சம் | ரூ. 15.05 லட்சம் |
ஈரோடு | ரூ. 12.74 லட்சம் | ரூ. 15.05 லட்சம் |
மாருதி ஜிம்னி ஃபைவ்-டோர் வேரியண்ட்ஸ் மற்றும் வண்ணங்கள்:
மாருதி சுஸுகி ஜிம்னி இரண்டு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது: ஜெட்டா மற்றும் ஆல்ஃபா. சிஸ்லிங் ரெட், நெக்ஸா ப்ளூ, க்ரானைட் க்ரே, பேர்ல் ஆர்க்டிக் ஒயிட், ப்ளூயிஷ் பிளாக், சிஸ்லிங் ரெட் உடன் ப்ளூயிஷ் பிளாக் ரூஃப், மற்றும் கைனடிக் எல்லோ உடன் ப்ளூஷ் பிளாக் ரூஃப் என ஏழு வண்ணங்களில் கிடைக்கின்றன.
2023 ஜிம்னி இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்:
2023 ஜிம்னி 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர், K15B பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது, இது 103bhp மற்றும் 134Nm டோர்க்கை உருவாக்குகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் மற்றும் ஃபோர்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் யூனிட் உடன் கிடைக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்