- ஜூன் 2023 இல் விலைகள் அறிவிக்கப்படும்
- 1.5-லிட்டர் BS6 2-கம்ப்ளைன்ட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும்
ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் ஃபைவ்-டோர் கொண்ட ஜிம்னி அறிமுகமாகி நான்கு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆஃப்-ரோடு-ஃபோகஸ்ட் எஸ்யுவிக்கான முன்பதிவு ஜனவரியில் தொடங்கியது, இப்போது கார் தயாரிப்பாளர் 30,000 முன்பதிவுகளை அறிவித்துள்ளது.
மாருதி ஜிம்னியின் இன்ஜின்
ஜிம்னி 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 103bhp மற்றும் 134Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது மற்றும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இருக்கலாம். இந்த எஸ்யுவி ஆனது ஆல்-வீல்-டிரைவ் கான்ஃபிகரேஷன் உடன் தரநிலையாக வருகிறது.
மாருதி ஜிம்னி நிறங்கள்
மாருதி ஜிம்னி ஐந்து மோனோடோன் மற்றும் இரண்டு டூயல் டோன் நிறங்களில் வழங்குகிறது. கைனடிக் எல்லோ மற்றும் சிஸ்லிங் ரெட் ஆகியவை ப்ளூ-பிளாக் ரூஃப் உடன் இணைக்கப்படலாம், அதே சமயம் க்ரானைட் க்ரே, ஆர்க்டிக் ஒயிட், நெக்ஸா ப்ளூ மற்றும் ப்ளூயிஷ் பிளாக் வண்ண விருப்பங்கள் பாடியின் நிறமுடைய ரூஃப் உடன் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் மாருதி ஜிம்னியின் விலை மற்றும் லான்ச் தேதி
இந்த மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்கா போட்டியாளர்களின் விலை ஜூன் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும். இதன் விலை ரூ.10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்