- இந்தியாவில் இன்விக்டோ விலை ரூ.24.79 லட்சத்தில் தொடங்குகிறது
- 2.0 லிட்டர், பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின் மூலம் இயக்கப்படும்
மாருதி இன்விக்டோ புக்கிங் மற்றும் லான்ச்
இனோவா ஹைகிராஸ் அடிப்படையிலான இன்விக்டோஎம்பீவிக்கான முன்பதிவுகளை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த மாதம் ரூ.25,000க்கு நாட்டில் தொடங்கியது. இந்த வார தொடக்கத்தில், இந்த மாடலின் விலையை ரூ.24.79 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) கார் தயாரிப்பாளர் அறிவித்தார். முன்னதாக இந்த மாடல் என்கேஜ் என்று அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
2023 இன்விக்டோ இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
புதிய இன்விக்டோவில் 2.0-லிட்டர், ஃபோர்-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் 172bhp மற்றும் 188Nm டோர்க்கை உற்பத்தி செய்யும். இந்த இன்ஜின் 11bhp மற்றும் 206Nm கூடுதல் டோர்க்கை உருவாக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இ-சிவிடீ யூனிட் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கும். இன்விக்டோ லிட்டருக்கு 23.24 கி.மீ மைலேஜ் தரும் என்று மாருதி கூறுகிறது.
புதிய இன்விக்டோ கலர்ஸ் மற்றும் வேரியண்ட்ஸ்
மாருதி இன்விக்டோ நெக்ஸா ப்ளூ, மிஸ்டிக் ஒயிட், மெஜஸ்டிக் சில்வர் மற்றும் ஸ்டெல்லர்ப்ரான்ஜ் என நான்கு கலர்ஸில் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் ஆல்ஃபா+ மற்றும் ஜெட்டா+ ஆகிய இரண்டு வேரியண்ட்ஸில்ருந்து இருந்து தேர்வு செய்யலாம். செவன் சீட்டர் மற்றும் எய்ட் சீட்டர் கொண்ட விருபங்களில் இது வழங்கப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்