மாருதி சுஸுகியின் முதன்மை எம்பீவியான இன்விக்டோ, இந்தியாவில் 5 ஜூலை, 2023 அன்று ரூ.24.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்பு எங்கேஜ் என்று அழைக்கப்பட்ட இன்விக்டோ டொயோட்டா இனோவா ஹைகிராஸ்மறுபரிசீலனை செய்யப்பட்ட வெர்ஷனாகும், மேலும் இது நெக்ஸா விற்பனை நிலையங்கள் வழியாக இந்தியாவில் விற்கப்படுகிறது. 2.0 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் மோட்டார் கொண்ட செவன் மற்றும் எய்ட் சீட் கட்டமைப்புகளில் எம்பீவி மூன்று வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. இந்த கட்டுரையில், பிராண்டின் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபிளாக்ஷிப் எம்பீவியின் முதல் ஐந்து இன்டீரியர் சிறப்பம்சங்களை இதில் உள்ளிட்டுள்ளோம்.
பிளாக் இன்டீரியர் தீம்
இன்விக்டோ அதன் டாஷ்போர்டை ஹைகிராஸிலிருந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது, ஆனால் முற்றிலும் பிளாக் கலர் இன்டீரியர் தீம், ஷாம்பெயின் கோல்டு இன்சர்ட்ஸ் மற்றும் ஸ்டீயரிங் வீலில் ஒரு சுஸுகி லோகோவுடன் தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது. இந்த இன்டீரியர் தீம் எம்பீவியின் டோர் பேட்ஸின் மேல் லெதரெட் சீட்ஸ் மற்றும் சில சாஃப்ட்-டாப் மெட்டீரியல்ஸுடன் கூடிய ப்ரீமியம் உணர்வைக் கொடுக்கிறது. கியர் லெவர்டாஷ்போர்டில் நிமிர்ந்து பொருத்தப்பட்டு, சென்டர் கன்சோலில் நிறைய இடத்தை உருவாக்குகிறது. இது இப்போது டிரைவ் மோட் தீம்ஸ் மற்றும் இகோ இன்டிகேட்டர் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்
டாஷ்போர்டின் மையத்தில் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய புதிய 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. டாப்-ஸ்பெக் வேரியண்ட்டில் பிரத்யேகமாக ஃப்ரண்ட் பார்க்கிங் சென்சார்ஸுடன் 360 டிகிரி கேமராவைப் பெறுகிறது. ஹைகிராஸ் போலல்லாமல், இன்விக்டோவில் ஜேபிஎல் இன் ஒன்பது-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஏடாஸ் பாதுகாப்பு தொகுப்பை தவறவிட்டது.
பனோரமிக் சன்ரூஃப்
மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவுக்குப் பிறகு இது பிராண்டின் இரண்டாவது பனோரமிக் சன்ரூஃப் வழங்குவது இன்விக்டோ ஆகும். எலக்ட்ரோனிக் மூலம் இயக்கப்படும் இந்த சன்ரூஃப் ஆம்பியன்ட் லைட்டிங்கால் சூழப்பட்டுள்ளது.
மெம்ரி ஃபங்ஷன் கொண்ட பவர்ட் சீட்ஸ்
இன்னோவா ஹைக்ராஸின் இன்டீரியர் எப்போதுமே விசாலமானதாகவே இருக்கும், அதே போல் இன்விக்டோவும். இன்விக்டோவில் இரண்டாவது வரிசையில் கேப்டன் சீட்ஸ் செவன் மற்றும் எய்ட் சீட்டர் கொண்ட கட்டமைப்புகளில் உள்ளது. வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் டிரைவர் சீட் எட்டு வழி செயல்பாட்டுடன் சரிசெய்யக்கூடி மெம்ரி ஃபங்ஷன் கொண்ட பவர்ட் சீட்ஸ் இதில் உள்ளன. ஹைகிராஸ் மீது தவறவிடப்படுவது பவர்ட் ஒட்டோமான் சீட்ஸ். மேலும், இதில் ஒரு பவர்ட் டெயில்கேட்டையும் பெறுகிறது.
டெக்னாலஜி மற்றும் அம்சங்கள்
வாகன உற்பத்தியாளர் இன்விக்டோவை அதிக டெக்னாலஜி மற்றும் அம்சங்களில் ஏற்றியிருக்கிறார். மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்களைத் தவிர, எம்பீவி ஆனது ரிமோட் ஃபங்ஷன் கொண்ட சுஸுகி கனெக்ட் டெக்னாலஜியை க் கொண்டுள்ளது. இந்த அம்சங்களில் இ-கேர், ரிமோட்-பவர்ட் விண்டோ, ரிமோட் வென்டிலேடெட் சீட், இ-கால் மற்றும் பல உள்ளன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்