- புதிய ‘அகஸ்டிக் வெஹிகல் அலர்ட்டிங் சிஸ்டம்’ சேர்க்கப்பட்டது
- ரூ.4,000 வரை விலை உயர்வு
மாருதி சுஸுகி நிறுவனம் கிராண்ட் விட்டாராவின் ஹைப்ரிட் வேரியண்ட்க்கான புதிய ஃபீச்சர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. ஒரு ஒழுங்குமுறை தாக்கல் படி, வாகன உற்பத்தியாளர் இப்போது 'அகஸ்டிக் வெஹிகல் அலர்ட்டிங் சிஸ்டம்’ (ஏவிஏஎஸ்) எனப்படும் புதிய பாதசாரி பாதுகாப்பு அம்சத்துடன் பொருத்தப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது.
மாருதி கிராண்ட் விட்டாரா புதிய சேஃப்டி ஃபீச்சர் விளக்கம்
இந்த புதிய அம்சம் டிரைவர் மற்றும் பாதசாரிகள் எதிரே வரும் வாகனத்தை எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது. இதற்காக, வாகனத்தின் ஐந்தடி எல்லைக்குள் இருக்கும் பாதசாரிகள் மற்றும் பிற வாகன ஓட்டிகளுக்குக் கேட்கக்கூடிய ஒலி எச்சரிக்கையை இந்த அமைப்பு வெளியிடும்.
கிராண்ட் விட்டாரா ஹைப்ரிட் புதிய விலை
இந்த அம்சம் மேம்படுத்தப்பட்டதன் மூலம், ஜூலை 17, 2023 முதல், அனைத்து ஹைப்ரிட் வேரியண்ட்ஸின் விலைகளும் ரூ.4,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. டூயல்-டோன் பெயிண்ட்டுடன் ஜெட்டா ப்ளஸ் மற்றும் ஆல்ஃபா ப்ளஸ் வேரியண்ட்ஸில் கிடைக்கிறது, இப்போது விலைகள் ரூ.18.49 மற்றும் ரூ.19.84 லட்சம், எக்ஸ்-ஷோரூம்.
மாருதி கிராண்ட் விட்டாரா இன்ஜின் விவரக்குறிப்புகள்
கிராண்ட் விட்டாரா ஹைப்ரிட் வெர்ஷன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி பேக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 91bhp மற்றும் 122Nm டோர்க்கை வெளியிடும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ள நிலையில், எலக்ட்ரிக் மோட்டார் 79bhp பவரை வெளிப்படுத்தும். ஒட்டுமொத்தமாக, ஹைப்ரிட் இன்ஜின் 114bhp அவுட்புட் மற்றும் இ -சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்