- இந்தியாவில் ஃப்ரோன்க்ஸின் ஆரம்ப விலை ரூ.7.46 லட்சம்
- இந்த மாடல் ஒன்பது நிறங்கள் மற்றும் ஐந்து வேரியண்ட்ஸில் கிடைக்கிறது
மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ் லான்ச் டைம்லைன் மற்றும் பேஸ் வேரியண்டின் விலை
மாருதி சுஸுகி பலேனோ அடிப்படையிலான ஃப்ரோன்க்ஸ் கூபே எஸ்யுவியை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ.7.46 லட்சம். கார் தயாரிப்பாளர் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மாடலை வழங்கத் தொடங்கியுள்ளார், மேலும் இந்தகாரின் காத்திருப்பு காலத்தை நாங்கள் இப்போது தகவல் எடுத்துள்ளோம்.
மூன்று நகரங்களில் மாருதி ஃப்ரோன்க்ஸ் வெயிட்டிங் பீரியட்
லோக்கல் டீலர்ஸின்ப்படி, புதிய ஃப்ரோன்க்ஸ் காத்திருப்பு காலத்தைகொல்கத்தாவில் 6 வாரங்கள் வரை வேரியண்ட் முழுவதும் வழங்குகிறது. இதேபோல், மாருதியின் சமீபத்திய தயாரிப்புக்கான காத்திருப்பு காலம் மும்பையில் இரண்டுவாரங்கள் வரை உள்ளது. ஹைதராபாத்தில், ஃப்ரோன்க்ஸை வாங்கும்வாடிக்கையாளர்கள் டெல்டா வேரியண்ட்டிற்காக இரண்டு வாரங்கள் காத்திருக்கவேண்டும், மற்ற அனைத்து வேரியண்ட்ஸும் உடனடியாகக் கிடைக்கும்.
2023 ஃப்ரோன்க்ஸ் வேரியண்ட்ஸ் மற்றும் நிறங்கள்
மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ் ஒன்பது வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது, அதாவது ஆர்க்டிக் ஒயிட், க்ராண்டியர் க்ரே, எர்டன் ப்ரௌன், ஸ்ப்ளெண்டிட் சில்வர், ஒபுலேண்ட் ரெட், ப்ளூயிஷ் பிளாக் ரூஃப் உடன் மட் ப்ரௌன், ப்ளூயிஷ் பிளாக் ரூஃப் கொண்ட ஒபுலேண்ட் ரெட், மற்றும் ப்ளூயிஷ் பிளாக் ரூஃப் கொண்ட ஸ்ப்ளெண்டிட் சில்வர். மேலும், இந்த மாடல் சிக்மா, டெல்டா, டெல்டா+, ஜெட்டா மற்றும் ஆல்ஃபா என ஐந்து வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது.
புதிய மாருதி ஃப்ரோன்க்ஸின் மைலேஜ் மற்றும் இன்ஜின் விவரக்குறிப்புகள்
மாருதி ஃப்ரோன்க்ஸ் 1.2-லிட்டர்நேச்சுரலி அஸ்பிரெடெட்பெட்ரோல் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, இது 89bhp மற்றும் 113Nm டோர்க்கை உருவாக்குகிறது, இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் மற்றும் ஒரு ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. 1.0-லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 99bhp மற்றும் 147Nm டோர்க்கை உருவாக்குகிறது, ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாடல் லிட்டருக்கு 22.89 கிமீ மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ் விலை
ஃப்ரோன்க்ஸ் கூபே-எஸ்யுவியின் வேரியண்ட் வாரியான விலைகள் பட்டியலிடப்பட்டுள்ளது (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்):
நியூ ஃப்ரோன்க்ஸ் சிக்மா 1.2 எம்டீ | ரூ. 7.46 லட்சம் |
நியூ ஃப்ரோன்க்ஸ் டெல்டா 1.2 எம்டீ | ரூ. 8.32 லட்சம் |
நியூ ஃப்ரோன்க்ஸ் டெல்டா 1.2 ஏஎம்டீ | ரூ. 8.87 லட்சம் |
நியூ ஃப்ரோன்க்ஸ் டெல்டா+ 1.2 எம்டீ | ரூ. 8.72 லட்சம் |
நியூ ஃப்ரோன்க்ஸ் டெல்டா+ 1.2 ஏஎம்டீ | ரூ. 9.27 லட்சம் |
நியூ ஃப்ரோன்க்ஸ் டெல்டா+ 1.0 எம்டீ | ரூ. 9.72 லட்சம் |
நியூ ஃப்ரோன்க்ஸ் ஜெட்டா 1.0 எம்டீ | ரூ. 10.55 லட்சம் |
நியூ ஃப்ரோன்க்ஸ் ஜெட்டா 1.0 ஏடீ | ரூ. 12.05 லட்சம் |
நியூ ஃப்ரோன்க்ஸ் ஆல்ஃபா 1.0 எம்டீ | ரூ. 11.47 லட்சம் |
நியூ ஃப்ரோன்க்ஸ் ஆல்ஃபா 1.0 ஏடீ | ரூ. 12.97 லட்சம் |
நியூ ஃப்ரோன்க்ஸ் ஆல்ஃபா 1.0 எம்டீ டூயல்-டோன் | ரூ. 11.63 லட்சம் |
நியூ ஃப்ரோன்க்ஸ் ஆல்ஃபா 1.0 ஏடீ டூயல்-டோன் | ரூ. 13.13 லட்சம் |
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்