- ஏடாஸுடன் வரும் மாருதியின் முதல் கார் இதுவாகும்
- விரைவில் கிராண்ட் விட்டாராவிலும் ஏடாஸ் வழங்கப்படும்
மாருதி சுஸுகியின் லேட்டஸ்ட் எஸ்யுவி ஃப்ரோன்க்ஸ் சமீபத்தில் டெஸ்டிங்கில் தென்ப்பட்டது, மேலும் இந்த முறை ஏடாஸ் (அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) போன்ற அம்சங்களுடன் காணப்பட்டது. இந்த அம்சம் வாகனம் ஓட்டுவதை இன்னும் பாதுகாப்பானதாகவும், ஸ்மார்ட்டாகவும் ஆக்குகிறது.
இங்குள்ள படங்களில் காணக்கூடியது போல, ஃப்ரண்ட் கிரில்லில் ஏடாஸ் சென்சார் உள்ளது, இது தற்போதைய மாடலில் இல்லை. மாருதி இந்த எஸ்யுவியை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப் போகிறது என்பதற்கான அறிகுறியா? இதைத் தொடர்ந்து தற்போது இந்த கார் குறித்த ஆர்வம் ஆட்டோமொபைல் பிரியர்களிடையே அதிகரித்துள்ளது.
மாருதி சுஸுகி சமீபத்தில் ஜப்பானிய சந்தைக்கு ஃப்ரோன்க்ஸ்ஸை ஏற்றுமதி செய்வதாக அறிவித்தது. மாருதி தற்போது இந்திய சந்தையில் விற்கப்படும் அதன் தயாரிப்புகள் எதிலும் ஏடாஸ் வழங்குவதில்லை.
கார் உற்பத்தியாளர் கிராண்ட் விட்டாராவில் இந்த வசதியை வழங்குவதில் பணியாற்றி வருகிறார் என்பதையும், இந்த டெக்னாலஜி கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது என்பதையும் உங்களுக்குச் சொல்கிறோம். இப்போது கேள்வி என்னவென்றால், மாருதி இந்த எஸ்யுவியை எந்த விலையில் அறிமுகப்படுத்துகிறது மற்றும் என்ன புதிய அம்சங்களை வழங்குகிறது? அனைவரின் பார்வையும் அதன் மீதே!
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்