- இந்தியாவில் ஃப்ரோன்க்ஸின் விலை ரூ. 7.51 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது
- இது டர்போ இன்ஜின் ஆப்ஷனுடன் கிடைக்கிறது
மாருதி அரீனா மற்றும் நெக்ஸா ரேஞ்சில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்ஸில் இந்த மாதம் பல மாடல்களில் பெரும் தள்ளுபடியை வழங்குகின்றன. இந்த சலுகை கேஷ் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி போன்ற வடிவத்தில் கிடைக்கும்.
மாருதி ஃப்ரோன்க்ஸின் டர்போ-பெட்ரோல் வெர்ஷனில் ரூ. 60,000 வரை கேஷ் தள்ளுபடி மற்றும் ரூ. 10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகை பிப்ரவரி 2024 வரை செல்லுபடியாகும் மற்றும் அதன் என்ஏ பெட்ரோல் வெர்ஷனில் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.
ஃப்ரோன்க்ஸ் பலேனோ-அடிப்படையிலான கூபே எஸ்யுவி ஆகும், இது 1.2-லிட்டர், ஃபோர் சிலிண்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0-லிட்டர், த்ரீ-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் வழங்கபடுகின்றன. இதன் 1.2 லிட்டர் இன்ஜின் 89bhp மற்றும் 113Nm டோர்க்கையும் உருவாக்குகிறது, அதே சமயம் டர்போ இன்ஜின் 99bhp பவரையும் 148Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் இதில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல், ஏஎம்டீ மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்டர் யூனிட் ஆகியவை அடங்கும். மற்ற செய்திகளைப் பற்றி பேசுகையில், இந்த மாத தொடக்கத்தில் மாருதி ஃப்ரோன்க்ஸின் விலையில் ரூ. 10,000 வரை உயர்த்தப்பட்டது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்