- இந்தியாவில் ஃப்ரோன்க்ஸ் சிஎன்ஜியின் விலை ரூ.8.41 லட்சம்
- மாடல் ரேஞ்சில் அனைத்து வேரியண்ட்ஸிலும் ஆறு ஏர்பேக்ஸ் கிடைக்கும்
ஃப்ரோன்க்ஸ் சிஎன்ஜி லான்ச் மற்றும் பேஸ் வேரியண்ட்டின் விலை
மாருதி சுஸுகி கடந்த வாரம் நாட்டில் ஃப்ரோன்க்ஸ் சிஎன்ஜியை அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ.8.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் பெட்ரோல் வேரியண்ட்ஸின் விலை இந்தியாவில் ரூ.7.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
ஃப்ரோன்க்ஸின் திருத்தப்பட்ட சேஃப்டி ஃபீச்சர்ஸ் லிஸ்ட்
லீக் செய்யப்பட்ட டாக்குமெண்ட்ஸின்படி, மாருதி ஃப்ரோன்க்ஸ் சிஎன்ஜி வெர்ஷன் விரைவில் சிக்மா மற்றும் டெல்டா உள்ளிட்ட இரண்டு வேரியண்ட்ஸிலும் ஆறு ஏர்பேக்ஸைப் பெறலாம். இந்த இரண்டு வெர்ஷன்ஸும் தற்போது டூயல் ஏர்பேக்ஸுடன் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றது. இந்த அப்டேட் மூலம், பெட்ரோல் வெர்ஷன்ஸ் சிக்மா, டெல்டா மற்றும் டெல்டா+ வேரியண்ட்ஸில் ஆறு ஏர்பேக்ஸைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம், இதனால் மாடல் ரேஞ்ச் ஸ்டாண்டர்டாக வழங்குவது மாறும். இந்த பலேனோ-அடிப்படையிலான கூபே எஸ்யுவி ஐந்து வேரியண்ட்ஸிலும், எட்டு வண்ணங்களிலும் வழங்கப்படுகிறது, அதன் வேரியண்ட் வாரியான அம்சங்கள் எங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
மாருதி ஃப்ரோன்க்ஸ் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
2023 ஃப்ரோன்க்ஸ் ஆனது 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மூலம் 89bhp மற்றும் 113Nm டோர்க்கை வெளிப்படுத்துகிறது, அதே நேரத்தில் சிஎன்ஜி வெர்ஷன் 76bhp மற்றும் 98.5Nm டோர்க்கை உருவாக்குகிறது. மேலும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 99bhp மற்றும் 148Nm டோர்க்கை உருவாக்கும். ஃப்ரோன்க்ஸ் ரேஞ்சிற்கான டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் யூனிட், ஒரு ஏஎம்டீ யூனிட் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் யூனிட் ஆகியவை அடங்கும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்