- ஃப்ளோட்டிங் சென்டர் கன்சோலைப் பெறும்
- பிளாக் மற்றும் ப்ரௌன் சீட் அப்ஹோல்ஸ்டரியையும் பெறலாம்
மாருதி சுஸுகி தனது முதல் எலக்ட்ரிக் வாகனமான 'eVX' என்ற பெயரில் இந்தியாவிற்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த ஃபுல்லி-எலக்ட்ரிக் எஸ்யுவி உலகளவில் பல சந்தர்ப்பங்களில் காட்சிப்படுத்தப்பட்டது, சமீபத்தில் இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவிலும் இது காட்சிப்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு, மாடல் பலமுறை ஸ்பை செய்யப்பட்டது மற்றும் சமீபத்திய ஸ்பை படங்களில் வரவிருக்கும் eVX எஸ்யுவியின் இன்டீரியர் விவரங்களை வெளிப்படுத்தியது.
புகைபடத்தில், மாருதி eVX ஆனது வழக்கமான எலக்ட்ரிக் வாகனம் போலவே ஸ்டோரேஜ் ஸ்பேஸ் மற்றும் பெரிய கேபின்னை பெறும். இதில் ஃப்ளோட்டிங் சென்டர் கன்சோல், டிரைவ் செலக்டருக்கான ரோட்டரி நாப், சென்டர் ஆர்ம்ரெஸ்ட், ஃப்ரீ-ஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், மீடியா கன்ட்ரோல்களுடன் கூடிய புதிய டி-கட் ஸ்டீயரிங் வீல் மற்றும் பிளாக் மற்றும் ப்ரௌன் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
மேலும், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், வென்டிலேடெட் மற்றும் பவர்ட் ஃப்ரண்ட் சீட்ஸ், ப்ரீமியம் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் ஏடாஸ் போன்ற அம்சங்களுடன் eVX வரும் என எதிர்பார்க்கிறோம்.
மாருதி eVX இன் அறிமுகதிர்க்கு பிறகு இது ஹூண்டாய் க்ரெட்டா இவி, கர்வ் இவி மற்றும் ஹேரியர் இவி ஆகியவற்றுடன் போட்டியிடும், இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 500கிமீ க்கும் அதிகமான டிரைவிங் ரேஞ்சை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி eVX ஆனது இதேபோன்ற டிரைவிங் ரேஞ்சுடன் 60kWh பேட்டரி பேக்கைப் பெறும் என்று எதிர்பார்க்கிறோம். மாருதி இந்த மாடலை 2025 இல் அறிமுகப்படுத்தும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்