- கடந்த மாதம் ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் eVX ஐ மாருதி காட்டியது
- 2025 ஆம் ஆண்டு லான்ச் செய்யப்படும்
சமீபத்தில் மாருதி சுஸுகி இந்தியாவில் eVX எலக்ட்ரிக் வாகனத்தை சோதனை செய்யத் தொடங்கியுள்ளது, இது 2025 க்குள் லான்ச் செய்யப்படலாம்.
படங்களின்படி, மாருதி eVX முற்றிலும் கருப்பு நிறத்தில் மூடப்பட்டு, தயாரிப்புக்கு முந்தைய டெயில்லைட்ஸுடன் காணப்படுகிறது. இதன் எக்ஸ்டீரியரில் கன்மெட்டல் நிறத்துடன் கூடிய பெரிய மல்டி-ஸ்போக் அலோய் வீல்ஸ், ஹை- மவுண்டட் ஸ்டாப் லைட் கொண்ட இன்டெக்ரேட்டட் ஸ்பாய்லர், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், நம்பர் பிளேட் இடைவெளியுடன் கூடிய பின்புற பம்பர் மற்றும் நீண்ட ரிஃப்ளெக்டர்ஸ், ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் சி-பில்லர் மீது ஒருங்கிணைந்த டோர் ஹேண்டல்ஸ் போன்ற அம்சங்களும் உள்ளன.
சுவாரஸ்யமாக, புதிய eVX ஆனது ஓஆர்விஎம்களில் உள்ள 360 டிகிரி கேமராக்களுக்குப் பதிலாக இருபுறமும் லேன்-வாட்ச் கேமராக்களைக் கொண்டிருக்கும். இதன் முன் ஃபெண்டரில் சார்ஜிங் ஃபிளாப்பும் இருக்கும்.
சுஸுகி eVX இன் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் எலக்ட்ரிக் மோட்டாருடன் கூடிய 60kWh பேட்டரி பேக் இருக்கும். இந்த கார் க்ரெட்டா EV மற்றும் எலிவேட் EV உடன் போட்டி போடும் மற்றும் இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ தூரம் வரை செல்லும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்