- இந்தியாவில் ஆரம்ப விலை ரூ.8.64 லட்சம்
- பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின்ஸில் கிடைக்கும்
மாருதி சுஸுகி 15 மார்ச் 2022 அன்று நாட்டில் அப்டேடட் எர்டிகாவை அறிமுகப்படுத்தியது. இந்த எம்பீவி ஆனது LXi, VXi, ZXi மற்றும் ZXi ஆகிய நான்கு வேரியண்ட்ஸில் மற்றும் ஏழு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.
மாருதி எர்டிகா வெயிட்டிங்பீரியட்
தற்போது, செவன்-சீட்டர் கொண்ட இந்த எம்பீவி, முன்பதிவு செய்த நாளிலிருந்து 24-28 வாரங்கள் காத்திருக்கும் காலத்தை ஈர்க்கிறது. இது நிறம், வேரியண்ட், டீலர்ஷிப் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மாறுபடலாம். ஆர்வமுள்ள வாடிக்கையாளர் இதைப் பற்றி மேலும் அறிய அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளலாம்.
மாருதி சுஸுகி எர்டிகா இன்ஜின்
எர்டிகா 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 102bhp மற்றும் 137Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது மற்றும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது 87bhp மற்றும் 121.5Nm ஐ உருவாக்கும் சிஎன்ஜி இன்ஜினையும் வழங்குகிறது மற்றும் இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மாருதி எர்டிகா விலை
மாருதி சுஸுகி எர்டிகாவின் வேரியண்ட் வாரியான விலைகள் பின்வருமாறு.
வேரியண்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலை |
LXi(O) எம்டீ | ரூ. 8,64,000 |
VXi(O) எம்டீ | ரூ. 9,78,000 |
VXi(O) சிஎன்ஜி | ரூ. 10,73,000 |
ZXi(O) எம்டீ | ரூ. 10,88,000 |
VXi ஏடீ | ரூ. 11,28,000 |
ZXi ப்ளஸ் எம்டீ | ரூ. 11,58,000 |
ZXi(O) சிஎன்ஜி | ரூ. 11,83,000 |
ZXi ஏடீ | ரூ. 12,38,000 |
ZXi ப்ளஸ் ஏடீ | ரூ. 13,08,000 |
மாருதி சுஸுகி எர்டிகா போட்டியாளர்கள்
இந்த எம்பீவி செக்மென்ட்டில், கியா கேரன்ஸ், ரெனோ ட்ரைபர் மற்றும் ஹூண்டாய் அல்கஸார் ஆகியவற்றுக்கு எதிராக மாருதி சுஸுகி எர்டிகா போட்டியிடுகிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்