- டொயோட்டா இனோவா ஹைகிராஸை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்
- ஆண்டுதோறும் 9,000 இனோவா அடிப்படையிலான மாடல்ஸை விற்பனை செய்ய மாருதி எதிர்பார்க்கிறது
மாருதி சுஸுகியின் புதிய எம்பீவி பெயர் மற்றும் டைம்லைன்
மாருதி சுஸுகி தனது புதிய டொயோட்டா இனோவா ஹைகிராஸ் அடிப்படையிலான எம்பீவியின் வருகையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது, இது ஜூலை 5 ஆம் தேதி வெளியிடப்படும். எலிவேட் என்று அழைக்கப்படும், கார் தயாரிப்பாளர் ஒவ்வொரு ஆண்டும் இந்த மாடலின் 9,000 யூனிட்ஸை விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாருதி என்கேஜ் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
மாருதி சுஸுகி என்கேஜ் எம்பீவி ஹைப்ரிட் மோட்டாருடன் இணைக்கப்பட்ட 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும் என்று அறிந்தவர்கள் தெரிவிக்கின்றன. முந்தையது 172bhp மற்றும் 188Nm டோர்க்கை உற்பத்தி செய்ய ட்யூன் செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் எலக்ட்ரிக் மோட்டார் கூடுதலாக 206Nm டோர்க்கை உருவாக்குகிறது. இது இ-சிவிடீ யூனிட் உடன் மட்டுமே வழங்கப்படும்.
என்கேஜின் எக்ஸ்டீரியர் டிசைன்
இனோவா ஹைகிராஸ் உடன் ஒப்பிடும் போது மாருதி என்கேஜின் எக்ஸ்டீரியர் டிசைனில் மாற்றங்கள் குறித்த விவரங்கள் தற்போது குறைவாகவே உள்ளன. இந்த வார தொடக்கத்தில், அறிமுகத்தின் போது என்கேஜின் புதிய கிரில் பற்றிய பிரத்யேக விவரங்களை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வந்துள்ளோம். மாற்றப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்ஸ் மற்றும் புதிய அலோய் வீல்ஸ் என சில மாற்றங்கள் வரலாம்.
2023 மாருதி என்கேஜ் இன்டீரியர் மற்றும் ஃபீச்சர்ஸ்
மாருதியின் ஹைகிராஸ் அடிப்படையிலான எம்பீவி, இந்த மாடலின் டொயோட்டாவின் டாப்-ஸ்பெக் ZX மற்றும் ZX(O) வேரியண்ட்ஸ் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு சில குறிப்பிடத்தக்க அம்சங்களில் 360 டிகிரி கேமரா, ஏடாஸ், பனோரமிக் சன்ரூஃப், த்ரீ- ஜோண் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் மெம்ரி ஃபங்ஷன் கூடிய பவர்டு டிரைவர் சீட்ஸ் ஆகியவை அடங்கும்.
மாருதி என்கேஜ் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
இந்தியாவில், மாருதி என்கேஜ் எம்பீவி ரூ. 25-30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்டதும், இந்த மாடல் டொயோட்டா இனோவா ஹைகிராஸ், கியா கேரன்ஸ், ஹுண்டாய் அல்கஸார், மஹிந்திரா XUV700, டாடா சஃபாரி மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்