- நான்கு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது
- சிஎன்ஜி விருப்பங்களில் பெறலாம்
ஜூன் 2022 இல், மாருதி சுஸுகி இந்தியாவில் புதிய பிரெஸ்ஸாவை ரூ.7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. தற்போது, எஸ்யுவியின் ஆரம்ப விலை ரூ.8.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) பேஸ் LXi க்கு மற்றும் ரூ.14.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) டாப்-ஸ்பெக் ZXi+ வேரியண்ட்டிற்கு. பிரெஸ்ஸாவை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி விருப்பங்களில் நான்கு வேரியண்ட்ஸில் பெறலாம்.
மாருதி பிரெஸ்ஸாவின் வெயிட்டிங் பீரியட்:
தற்போது, முன்பதிவு செய்த நாளிலிருந்து கொல்கத்தாவில் ஒன்பது முதல் 12 வாரங்கள் வரை வெயிட்டிங் பீரியடை மாருதி பிரெஸ்ஸா கோருகிறது. டீலர், வேரியண்ட், பவர்ட்ரெயின், நிறம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து வெயிட்டிங் பீரியட் மாறுபடலாம்.
பிரெஸ்ஸா இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்:
பிரெஸ்ஸா 1.5 லிட்டர் K12C பெட்ரோல் இன்ஜின் மூலம் 103bhp மற்றும் 128Nm டோர்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த மோட்டார் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் யூனிட்டுடன் இணைக்கப்படலாம். இந்த எஸ்யுவி, சிஎன்ஜி வேரியண்ட்டிலும் கிடைக்கும்.
மாருதி பிரெஸ்ஸாவின் போட்டியாளர்கள்:
புதிய மாருதி சுஸுகி பிரெஸ்ஸா நாட்டில் ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், டொயோட்டா அர்பன் க்ரூஸர், டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா XUV300 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்