- பிரெஸ்ஸா அர்பானோ எடிஷன் LXi மற்றும் VXi வேரியன்ட்ஸில் கிடைக்கும்
- இவற்றில் பல தனித்தனி ஆக்சஸரீஸ் கூடுதல் விலைக்கு வழங்கப்படும்
வெளியான தகவலின்படி, மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவின் ஸ்பெஷல் எடிஷன்னை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது பிரெஸ்ஸா அர்பானோ எடிஷன் என அழைக்கப்படும் மற்றும் LXi மற்றும் VXi வேரியன்ட்ஸில் பிரத்தியேகமாக கிடைக்கும்.
பிரெஸ்ஸா அர்பானோ எடிஷன் LXi வேரியன்ட்டில், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்பீக்கர்ஸ், ஃபாக் லைட்ஸ், ஃப்ரண்ட் மற்றும் ரியர் ஸ்கிட் பிளேட்ஸ், பாடி சைடு மோல்டிங்ஸ், வீல் ஆர்ச் கிட் மற்றும் கிரில்லுக்கான அலங்காரம் உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் வரும்.
இதேபோல், பிரெஸ்ஸா அர்பானோ வெர்ஷனின் VXi வேரியன்ட்டில், ஃபாக் லைட்ஸ், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 3D ஃபுளோர் மேட்ஸ், நம்பர் பிளேட் ஃபிரேம்ஸ், மெட்டல் சில் கார்டுஸ், பாடி சைட் மோல்டிங் மற்றும் வீல் ஆர்ச் கிட் உள்ளிட்ட புதிய அம்சங்களைப் பெறும். இது தவிர, டாஷ்போர்டும் மேம்படுத்தப்படும், இருப்பினும் அதன் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
புதிய பிரெஸ்ஸா அர்பானோ எடிஷனில் அதே 1.5 லிட்டர், ஃபோர்-சிலிண்டர், என்ஏபெட்ரோல் இன்ஜின் இருக்கும், இது 102bhp பவரையும் 137Nm டோர்க்கையும் ஜெனரேட் செய்கிறது. டிரான்ஸ்மிஷனுக்காக ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் அல்லது சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் தேர்வு செய்யலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்