மாருதி பிரெஸ்ஸாவின் புதிய மைலேஜ் வெளியீடு
- மேனுவல் வேரியண்ட்ஸின் மைலேஜ் லிட்டருக்கு 2.77 கி.மீ குறைந்துருக்கிறது
- திருத்தப்பட்ட சேஃப்டி ஃபீச்சர்ஸ்
பெரும்பாலான மாருதி சுஸுகி கார்ஸில் ஸ்மார்ட் ஹைப்ரிட் வெஹிகல் சிஸ்டமுடன் வழங்கப்படுகின்றன. இது மைலேஜை அதிகரிக்க உதவியது. சமீபத்தில் நிறுவனம் பிரெஸ்ஸா எஸ்யுவியின் மேனுவல் வேரியண்ட்டிலிருந்து ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டத்தை நீக்கியது, இதன் காரணமாக அதன் ஏஆர்ஏஐ ஃப்யூல் எஃபிஷியன்சியின் புள்ளிவிவரங்கள் குறைந்துள்ளன.
பிரெஸ்ஸாவின் புதிய மைலேஜ்
வேரியண்ட்ஸ் (மேனுவல்) | பழைய மைலேஜ் | புதிய மைலேஜ் |
LXi மற்றும் VXi | லிட்டருக்கு 20.15 கி.மீ | லிட்டருக்கு 17.38 கி.மீ |
ZXi மற்றும் ZXi ப்ளஸ் | லிட்டருக்கு19.89 கி.மீ |
மேனுவல் வேரியண்ட்ஸின் ஃப்யூல் எஃபிஷியன்சி லிட்டருக்கு 2.77 கி.மீ குறைந்துள்ளது, அதே சமயம் மைல்ட் ஹைப்ரிட் கொண்ட ஆட்டோமேட்டிக் வெர்ஷனில் லிட்டருக்கு 19.80 கி.மீ மைலேஜைத் தருகிறது. பிரெஸ்ஸா சிஎன்ஜி ஆனது LXi, VXi மற்றும் ZXi வேரியண்ட்ஸில் கிடைக்கிறது மற்றும் லிட்டருக்கு 25.51 கி.மீ ஃப்யூல் எஃபிஷியன்சியை வழங்குகிறது.
பிரெஸ்ஸாவின் திருத்தப்தபட்ட அம்சங்களின் பட்டியல்
சமீபத்தில், நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களில் மாற்றங்களைச் செய்துள்ளது, அதன் பிறகு எலக்ட்ரோனிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம் (இஎஸ்பீ) மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவை சிஎன்ஜி வேரியண்ட்ஸிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. சீட் பெல்ட் ரிமைன்டர் சிஸ்டம் இப்போது இந்த ட்ரிம்ஸின் அனைத்து பயணிகளுக்கும் வழங்கப்படுகிறது, இது முன்பு டிரைவர் மற்றும் சக பயணிகளுக்கு மட்டுமே இருந்தது.
பிரெஸ்ஸா விலை மற்றும் வெயிட்டிங் பீரியட்
பிரெஸ்ஸாவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). எஸ்யுவி தற்போது தமிழ்நாட்டில் வேரியண்ட் மற்றும் நிறத்தைப் பொறுத்து 10 முதல் 14 வாரங்கள் வரை வெயிட்டிங் பீரியட்டில் விற்பனை செய்யபடுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்