- மாருதியின் 3.05 லட்சத்துக்கும் மேல் ஆர்டர் பெண்டிங்கில் உள்ளது
- இந்த வருடம் மூன்று புதிய மாடல்ஸை மாருதி அறிமுகப்படுத்தியாது
ஆகஸ்ட் 2023 இன் நிலவரப்படி மாருதி சுஸுகியின் பெண்டிங் ஆர்டர்
இந்த மாத நிலவரப்படி சுமார் 3.55 லட்சம் யூனிட் ஆர்டர்ஸ் பெண்டிங்கில் உள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. 2023-2024 நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.30 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது.
மாருதி கார்ஸ் பெண்டிங் ஆர்டர்ஸ்
அதிகாரப்பூர்வ விவரங்களின்படி, மாருதி எர்டிகா அதிகபட்சமாக 93,000 யூனிட்ஸ் ஆர்டர்ஸ்பெண்டிங்கில் உள்ளது. இதைத் தொடர்ந்து பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகியவை முறையே 48,000 மற்றும் 27,000 ஆர்டர்ஸ்பெண்டிங்கில் உள்ளன. ஜிம்னி மற்றும் ஃப்ரோன்க்ஸின் தலா 23,000 யூனிட்ஸ்க்கு பெண்டிங் உள்ளது, மேற்கூறிய மாடல்ஸின் மொத்த எண்ணிக்கையை 2.14 லட்சம் யூனிட்ஸாகக் கொண்டு செல்கிறது. டெலிவரி செய்யப்பட பெண்டிங்கில் உள்ள மொத்த 3.55 லட்சம் யூனிட்ஸில் மீதமுள்ள 1.41 லட்சம் யூனிட்ஸ்க்கான மாடல் வாரியாக பெண்டிங்கில் உள்ள ஆர்டர்ஸை கார் தயாரிப்பாளர் இன்னும் அறிவிக்கவில்லை.
மாருதி கார்ஸ் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்
மாருதி சுஸுகி இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாட்டில் மூன்று புதிய கார்ஸை அறிமுகப்படுத்தியது, இதில் ஃப்ரோன்க்ஸ் கூபே-எஸ்யுவி, ஜிம்னி எஸ்யுவி மற்றும் டொயோட்டா இனோவா ஹைகிராஸ்- அடிப்படையிலான இன்விக்டோ எம்பீவி ஆகியவை அடங்கும். மாருதியின் முதல் இவி 2025 இல் வரவிருக்கும் நிலையில், நிறுவனம் அதன் எலக்ட்ரிக் போர்ட்ஃபோலியோவிலும் வேலை செய்து வருகிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்