- இந்தியாவில் ஆரம்ப விலை ரூ.6.61 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- இது சிஎன்ஜி வேரியண்ட்டிலும் வழங்கப்படுகிறது
மாருதி சுஸுகியின் ப்ரீமியம் ஹேட்ச்பேக், பலேனோ, இந்தியாவில் பிப்ரவரி 2022 இல் ரூ.6.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே, கார்ரின் முன்பதிவு தொடங்கியதிலிருந்து 25,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை குவித்துள்ளதாக வாகன உற்பத்தியாளர் தெரிவித்தார். சிக்மா, டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய நான்கு வேரியண்ட்ஸில் பலேனோவைக் கொண்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாருதி பலேனோ வெயிட்டிங் பீரியட்
தற்போது, இந்த ஹேட்ச்பேகின் முன்பதிவு செய்த நாளிலிருந்து மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை வெயிட்டிங் பீரியடில் கிடைக்கின்றன. சென்னை நகரத்தில் செய்யப்படும் முன்பதிவுகளுக்கு இது பொருந்தும் மற்றும் டீலர்ஷிப், வேரியண்ட், நிறம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து இது மாறுபடலாம்.
ஜூலை 2023 இல் மாருதி பலேனோ தள்ளுபடிகள்
மாருதி சுஸுகி பலேனோ ஜூலை மாததில் ரூ.45,000 வரை தள்ளுபடியை ஈர்க்கிறது. இது கேஷ் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ஸ்கிராப் போனஸ் போன்ற வடிவில் பெறலாம், மேலும் இது 31 ஜூலை, 2023 வரை செல்லுபடியாகும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இதைப் பற்றி மேலும் அறிய அருகிலுள்ள டீலரைப் தொடர்பு கொள்ளவும்.
பலேனோ இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
மாருதி பலேனோ 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 89bhp மற்றும் 112Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த மோட்டார் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சிஎன்ஜி வேரியண்ட் 76bhp மற்றும் 98.5Nm டோர்க்கை உருவாக்குகிறது மற்றும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவலுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி பலேனோ போட்டியாளர்கள்
பலேனோ ஹூண்டாய் i20, டாடா அல்ட்ரோஸ் மற்றும் டொயோட்டா க்ளான்ஸா போன்றவற்றுடன் போட்டியிடுகிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்