- இந்தியாவில் ஆல்டோவின் விலை ரூ.3.99 லட்சம்
- இது நான்கு வேரியண்ட்ஸில் கிடைக்கும்
ஜூலை 2023 இல் மாருதி சுஸுகி தள்ளுபடிகள்
அரீனா மற்றும் நெக்ஸா செயின்ஸில் உள்ள சில மாருதி சுஸுகி டீலர்ஸ் இந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்ஸில் தள்ளுபடியை வழங்குகின்றது. இந்த நன்மைகள் கேஷ் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் போன்ற வடிவங்களில் பெறலாம்.
இந்த மாதம் ஆல்டோ தள்ளுபடிகள்
ஆல்டோவின் பெட்ரோல் எம்டீ வேரியண்ட்ஸ்க்கு ரூ.40,000 கேஷ் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.15,000, மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.4,000 கிடைக்கும். சிஎன்ஜி எம்டீ வேரியண்ட்ஸ்க்கு ரூ.20,000 கேஷ் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.15,000, மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.4,000 வழங்கப்படுகின்றது.
மாருதி ஆல்டோ K10 இன் பெட்ரோல் ஏஎம்டீ வேரியண்ட்ஸில் ரூ.20,000 கேஷ் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.15,000, மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.4,000 அடங்கும்.
மாருதி சுஸுகி ஆல்டோ லேட்டஸ்ட் அப்டேட்ஸ்
ஏப்ரல் மாதத்தில், க்ளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் ஆல்டோ டூ-ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றது. 2022 இல் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல், சைல்ட் சேஃப்டி டெஸ்டில் ஜீரோ-ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றது மற்றும் அந்த மாடலின் பாடி ஷெல் ஸ்டாண்டர்டாக உள்ளது. இந்திய பிராண்டின் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் ஏப்ரல் 2023 இல் சமீபத்திய எமிஷன் விதிமுறைகளுக்கு இணங்க அப்டேட் செய்யப்பட்டது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்