- பெட்ரோல் வேரியண்ட்டில் அதிகபட்ச தள்ளுபடி
- தற்போது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜினில் வழங்கப்படுகிறது
நீங்கள் ஆல்டோ K10 ஐ வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த மாதம் ரூ. 50,000 வரை தள்ளுபடியில் வாங்கலாம். மாருதி சுஸுகி ஆகஸ்ட் 2022 இல் அப்டேடட் ஆல்டோ K10 ஐ நாட்டில் அறிமுகப்படுத்தியது. இதன் நான்கு வேரியண்ட்ஸ் மற்றும் ஆறு வண்ணங்களில் வாங்கலாம். ஆகஸ்ட் 2023 இல் இந்த பிராண்டின் அதிகம் விற்பனையாகும் வாகனத்திற்கு கணிசமான தள்ளுபடியை மாருதி வழங்குகிறது. இது தவிர, அரீனாவின் பிற தயாரிப்புகளுக்கும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 2023 இல் மாருதி ஆல்டோ மீதான தள்ளுபடிகள்
மாருதி சுஸுகியின் இந்த ஹேட்ச்பேக்கில் மொத்தம் ரூ.54,000 வரை தள்ளுபடியை பிராண்ட் வழங்கியுள்ளது. ஆல்டோ k10 இன் பெட்ரோல் வேரியண்ட்க்கு ரூ.35,000 தள்ளுபடியும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும், ரூ .4,000 கார்ப்பரேட் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது . மறுபுறம், சிஎன்ஜி வேரியண்ட்க்கு ரூ.20,000 கேஷ் தள்ளுபடி, ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.
தள்ளுபடி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
மேலே உள்ள சலுகை ஆகஸ்ட் 31, 2023 வரை செல்லுபடியாகும் மற்றும் பிராந்தியம், டீலர்ஷிப், நிறம், வேரியண்ட் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடலாம். இந்தச் சலுகையில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் முழுமையான விவரங்களுக்கு அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளலாம்.
மாருதி ஆல்டோ 4.5 மில்லியன் யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது
முதன்முதலில் 2000 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆல்டோ இன்றுவரை கார் தயாரிப்பாளரின் சிறந்த விற்பனையான மாடல்ஸில் ஒன்றாகும். இந்த இரண்டு தசாப்தங்களில், பிராண்ட் ஆல்டோவின் 4.5 மில்லியன் யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது. தற்போதைய ஆல்டோ K10, மாடலின் மூன்றாம் ஜெனரேஷன், ரூ.5.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்து வருகின்றது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்