- பெரிய பூட் ஸ்பேஸ்
- மூன்று ஸ்கிரீன்களுடன் கூடிய புதிய டாஷ்போர்டு
மஹிந்திராவின் வரவிருக்கும் எலக்ட்ரிக் கார் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சோதனையிடப்பட்டு வருகின்றன. மஹிந்திரா XUV.e9 சமீபத்தில் மும்பையின் பரபரப்பான போக்குவரத்தில் சோதனையின் பொது தென்ப்பட்டது.
XUV.e9 என்பது எலக்ட்ரிக் XUV700 (XUV.e8) இன் கூபே வெர்ஷனாகும், மேலும் இது ஒரு ஸ்லோப்பிங்க் ரூஃபை கொண்டிருந்தாலும், இரண்டு 20-இன்ச் டயர்களைக் காப்புப் பிரதியாகக் கொண்டிருப்பதால் சோதனைக்கு போதிய பூட் இடமும் உள்ளது. கார் டெயில்லேம்ப்ஸில் இதே போன்ற டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்களைப் பெறுகிறது. முன்பு உறுதிசெய்யப்பட்டபடி, இவிஆனது சார்ஜிங் போர்ட் டெயில் லேம்ப்ஸில் கூடிய பெரிய அலோய் வீல்ஸைக் கொண்டுருந்தன.
இன்டீரியரில், இதன் மிகப்பெரிய சிறப்பம்சமாக, இது மூன்று பெரிய ஸ்கிரீன்ளுடன் வருகிறது - இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கோ-பாசஞ்சர். மற்றொரு சிறப்பம்சமாக டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் உள்ளது, இதில் இல்லுமினேட்டட் மஹிந்திரா லோகோ இருக்கலாம். மேலும், சென்டர் கன்சோலில் டிரைவிங் மோட்ஸ், ட்ராக்ஷன் கன்ட்ரோல், இ-பிரேக் மற்றும் பலவற்றைக் குறிக்கும் பட்டன்கள் உள்ளன. மேலும், காரின் உடலை அணைக்கும் படி ஹக்கிங் சீட் பயணிகளின் இடுப்பு மற்றும் தொடைகளுக்கு போதுமான ஆதரவை வழங்குகின்றன. இரண்டாவது வரிசையில் கூட, ஏர் கான் ப்ளோயர்களுடன் அதிக இடத்தைப் பெறலாம்.
XUV.e9 இன்ஜின் விவரங்கள்
XUV.e9 இன் அதிகாரப்பூர்வ விவரக்குறிப்புகள், பேட்டரி பற்றிய எந்த விவரங்களையும் மஹிந்திரா வெளியிடவில்லை, ஆனால் வரவிருக்கும் எலக்ட்ரிக் காரில் 60-80kWh ரெஞ்சில் பேட்டரி இருக்கும் என்று கூறப்படுகிறது ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்ட மிகப்பெரிய 80kWh பேட்டரி, இந்த மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 450-500கிமீ ரேஞ்சை அடையும் என்று நிறுவனம் கூறுகிறது, சோதனையின் போது இது வெறும் 369கிமீ ரேஞ்சை மட்டுமே வழங்கியது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்