- XUV700 அடிப்படையிலான எலக்ட்ரிக் கூபே எஸ்யுவி அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
- XUV.e9 அதன் ப்ரொடக்ஷன் ரெடி அவதாரத்தில் காணப்பட்டது
மஹிந்திரா 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதன் சந்தை அறிமுகத்திற்கு முன்னதாக XUV.e9 இல் தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. மஹிந்திரா பிராண்டிலிருந்து வரும் பல்வேறு இவிகளின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு இறுதியிலிருந்து இவற்றை அறிமுகப்படுத்தும், இதில் முதலாவது XUV700-அடிப்படையிலான XUV.e8 மாடலாக இருக்கும்.
ப்ரொடக்ஷன் ரெடி கார் போல தோற்றமளிக்கும், புதிய மஹிந்திரா XUV.e9 டாஷ்போர்டில் மூன்று (3)-ஸ்கிரீன் அமைப்பு, புதிய டூ-ஸ்போக் மல்டிஃபங்க்ஷன் ஃபிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல், டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், டிரைவ் மோட்ஸ்க்காக ஒரு ரோட்டரி டயல், புதிய கியர் லெவர் மற்றும் ஆட்டோ டிம்மிங் ஓஆர்விஎம் உள்ளிட்ட பல அம்சங்களைப் பெற்றுள்ளது.
எக்ஸ்டீரியரில், 2025 XUV.e9 புதிய ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்ஸ், புதிய வெர்டிகல்லி ஸ்டெக்கட் ஹெட்லேம்ப்ஸ், எல்-வடிவ எல்இடி டிஆர்எல்எஸ், ஃப்ரண்ட் மற்றும் ரியரில் எல்இடி லைட் பார், பனோரமிக் சன்ரூஃப், சி-பில்லரில் பொருத்தப்பட்ட ரியர் டோர் ஹேண்டல்ஸ் மற்றும் புதிய அலோய் வீல்ஸ் இதில் உள்ளன.
XUV.e9 இன் விவரங்கள் மட்டுமின்றி, வரவிருக்கும் இவி ரேஞ்சின் முழு தொழில்நுட்ப விவரக்குறிப்புகளையும் மஹிந்திரா இன்னும் வெளியிடவில்லை. இந்த மாடல் 60-80kWh பேட்டரி பேக்குடன் சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும், XUV700-அடிப்படையிலான எலக்ட்ரிக் கூபே எஸ்யுவி ஒருமுறை சார்ஜ் செய்தால் 500கிமீ தூரம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்
புகைப்பட ஆதாரம்: ரஷ்லேன்